முதுகில் ஆபரேஷன்.. காலை கீழ வச்சு நடக்குறதுக்கு கூட கஷ்டம்.. அஜித் பற்றி நெகிழ்ந்த சுந்தர். சி!

சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு, கேத்தரின் தெரசா நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த வருடத்தின் சரியான என்டர்டெயின் படமாக கேங்கர்ஸ் இருக்கும் என படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கேத்தரின் தெரசா பேசினார்.

சுந்தர். சி மற்றும் வடிவேலு மேடை ஏறி பேசும் போது அஜித் குமார் பற்றிய பேச்சு எழுந்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அதிரத் தொடங்கியது. அஜித் குமார் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும். அதுதான் ரசிகர்களின் சத்தத்திலேயே தெரிந்து விடுமே என்றார் சுந்தர். சி.

Sundar C reveals Ajith Kumar s dedication level in Gangers Pre release function

தனது இயக்கத்தில் அவர் நடிக்கும் போது தல என உயரவில்லை. அதற்கான முயற்சியில் நடித்துக் கொண்டிருந்தார். உடல் நலம் முடியாத போது அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் மெனக்கட்டு நடிப்பதை பார்த்தாலே எங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும் என அஜித் குமாரின் டெடிகேஷன் குறித்து சுந்தர். சி பேசியதும் மீண்டும் ரசிகர்கள் அரங்கத்தை அதிரச் செய்தனர்.

சுந்தர். சி இயக்கத்தில் அஜித்: 1999ம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் அஜித் குமார் உன்னைத்தேடி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் சிவகுமார், மாளவிகா, விவேக், கரண், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தில் அஜித் குமார் பணியாற்றும் போதே அவருக்கு உடல்நல பிரச்சனைகள் இருந்ததாக சுந்தர். சி கூறியுள்ளார்.

கேங்கர்ஸ் பட விழா: வரும் ஏப்ரல் 24ம் தேதி சுந்தர். சி இயக்கி நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் சுந்தர். சியுடன் இணைந்து சூப்பர் காமெடி காம்போவான வடிவேலு மீண்டும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க காத்திருக்கிறார். கலகலப்பு 2 படத்தில் நடித்த கேத்தரின் தெரசா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

நார்மலா நடக்கக் கூட முடியாது: என் கூட அஜித் குமார் படம் பண்ணும் போது அவர் தல என்கிற ரேஞ்சை அடையவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தருணம். அப்போதே அவருக்கு முதுகில் ஆபரேஷன் நடந்திருந்த நிலையில், அவரால் நார்மலா காலை தரையில் ஊன்றி மற்றவர்களை போல நடக்க முடியாது. ஒரு கால கீழே வைத்திருக்கிறோமா என்பதை அறிந்துக் கொள்ள அவர் கால்களை அடிக்கடி பார்த்துக் கொள்ளும் அளவுக்கு உடல் நலம் இருந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகள், நடன காட்சிகள் என அனைத்திலும் நடித்து எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார். இன்றைக்கும் அஜித் குமாரின் கடுமையான உழைப்பு வியக்க வைக்கிறது என்று சுந்தர். சி நெகிழ்ச்சியுடன் பேச அவரது ரசிகர்கள் அஜித் குமாரின் விடாமுயற்சியை நினைத்து உருகிப் போய்விட்டனர்.

கொட்டும் வசூல்: இந்த ஆண்டு என்டர்டெயின்மென்ட் படங்களான மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன் மற்றும் குட் பேட் அக்லி படங்கள் தான் தியேட்டர்களில் வசூலை வாரிக் குவிக்கின்றன. இந்நிலையில், அதே டோனில் வர காத்திருக்கும் கேங்கர்ஸ் படத்தையும் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடப் போவது உறுதி என படக்குழுவினர் பேசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X