கவுண்டமணி லுங்கியோட வந்துட்டாரு.. ரம்பா கிழிஞ்ச கவுனோட ஆடுனாங்க.. சுந்தர். சி பளிச் பேட்டி!
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. காமெடி மற்றும் ஹாரர் கலந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் படத்தை புரமோட் செய்து விடுவதாக தொடர்ந்து சுந்தர் சி பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் இடம்பெற்ற காட்சிகள் குறித்தும் அதன் பின்னணியில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாமன் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுந்தர் சி. நடிகை குஷ்பூவை திருமணம் செய்து வாழ்ந்து வரும் சுந்தர்சி தொடர்ந்து ஹீரோவாகவும் இயக்குநராகவும் அசத்தி வருகிறார்.
அரண்மனை 4: சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை நாவல் திரைப்படம் நாளை வெளியாகிறது. ஹன்சிகா நடிப்பில் வெளியான அரண்மனை 1 மற்றும் 2 படங்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், ஆர்யா, ராஷி கன்னா நடிப்பில் கடைசியாக வெளியான அரண்மனை மூன்றாம் பாகம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் 4ம் பாகம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென விலகிவிட்டார். அதன் பின்னர் சுந்தர் சி ஹீரோவாக நடித்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். தமன்னா மட்டும் ராஷி கன்னா இந்தப் படத்தில் கவர்ச்சியில் கலக்கி உள்ளனர்.
லுங்கியோட வந்த கவுண்டமணி: முதல் படத்திலிருந்து சுந்தர் சி இயக்கத்தில் கவுண்டமணி நடித்து வந்தார். முறை மாமன், முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி என வரிசையாக பல படங்களில் சுந்தர் சி இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ளார்.
மேட்டுக்குடி படத்தின் படப்பிடிப்பின் போது "வெல்வெட்டா வெல்வெட்டா" பாடலுக்கு நடனம் ஆடும் போது கவுண்டமணி அண்ணனையும் நடனமாட வைக்கலாம் என நினைத்து அவரை அழைத்தேன். டூயட் என்றதும் அவரும் ஹேப்பி ஆகி கோவாவுக்கு வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் நக்மா கவுண்டமணி அண்ணன் இங்க என்ன பண்றாரு என ஷாக் ஆகி கேட்க, உங்களுடன் தான் டான்ஸ் ஆடப் போகிறார் என்றேன். அவரும் சிரித்து விட்டு செம ஃபன்னாக இருக்கும் என்றார்.
படப்பிடிப்பை தாண்டி கோவாவில் கார்த்தியுடன் பப் ஒன்றுக்கு சென்றிருந்தோம். அங்கே கவுண்டமணி அண்ணன் லுங்கியுடன் வந்துவிட்டார். என்ன அண்ணா லுங்கி எனக் கேட்டேன். இது நம்ம ஊர் டிரெஸ்னு நினைச்சிப்பாங்க விடுப்பா என செம ரகளை செய்தார் எனக் கூறியுள்ளார்.
கிழிந்த கவுனில் ரம்பா: உள்ளத்தை அள்ளித்தா படத்தில் முதலில் வேறு நடிகை நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் தான் ரம்பா அந்தப் படத்தில் இணைந்தார். அறிமுகப் பாடலை வைத்து ரசிகர்களை அவருடன் கனெக்ட் செய்ய வேண்டுமென நினைத்து தான் "அழகிய லைலா" பாடலை வைத்தேன். ஆனால் அது அந்த அளவுக்கு ஹிட்டாகும் என அப்போது எதிர்பார்க்கவில்லை. அந்த பாடலில் கிழிந்த கவுனை எல்லாம் அணிந்து கொண்டு ரம்பா ஆடி இருப்பார் என பல சீக்ரெட்டுகளை சுந்தர் சி வெளிப்படுத்தியுள்ளார். அருணாச்சலம் படத்திலும் ரம்பாவை சுந்தர் சி நடித்திருப்பார்ர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











