பெயர் மட்டும்தான் என்னுடையது.. படத்தை நான் இயக்கவில்லை.. சுந்தர்.சி சொன்ன சீக்ரெட்

சென்னை: இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே டீசண்ட்டான வரவேற்பை பெற்றவை. அதேபோல் அரண்மனை 4ம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் சுந்தர்.சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு உண்மையை கூறியிருக்கிறார்.

முறைமாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. அந்தப் படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது. முதல் படமே மெகா ஹிட்டானது. முக்கியமாக படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்தும் இன்றுவரை அனைவரையும் சிரிக்க வைப்பவை. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத்தேடி, உனக்காக எல்லாம் உனக்காக என அவர் இயக்கிய படங்கள் மெகா ஹிட்டடித்தன.

Sundar C Reveals Shocking information about his Cinema Journey

காமெடி ஜானர் கிங்: சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான படங்களில் காமெடி காட்சிகள் சிரிப்பு சரவெடியை பற்ற வைப்பவை. வின்னர், உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம் என அவர் இயக்கிய படங்களில் சுந்தர் எழுதிய காமெடி காட்சிகள் இன்றுவரை சிரிப்பு வரவைக்கக்கூடியவை. அதன் காரணமாகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனை சீரிஸ்: இடையே ஹீரோவாகவும் நடிக்க தொடங்கிய அவர் கலகலப்பு படத்தை இயக்கி தனக்குள் இருக்கும் இயக்குநர் இன்னும் இறக்கவில்லை என்பதை நிரூபித்தார். பிறகு அரண்மனை படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களை இயக்கினார். அந்தப் படங்களும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றன. தற்போது அவர் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியிருக்கிறார். படம் ரிலீஸாகி பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுவருகிறது.

சுந்தர்.சி பேட்டி: இந்நிலையில் சுந்தர்.சி அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் பேசுகையில், “நான் எனது முதல் படமான முறைமாமன் படத்தை முடித்துவிட்டேன். அந்தப் படம் நல்ல ஹிட்டடித்திருந்தது. இதனையடுத்து இரண்டாவது படத்துக்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அதுதான் முறை மாப்பிள்ளை. அதில் அருண் விஜய் ஹீரோவாக கமிட்டானார். படத்தின் ஷூட்டிங்கும் திட்டமிட்டபடியே தொடங்கியது. அதில் எந்த பிரச்னையும் இல்லை.

விலகிவிட்டேன்: ஆனால் ஒருகட்டத்தில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கும் நிலை உருவாகிவிட்டது. எனவே தேதிகளில் பிரச்னை வந்துவிட்டது. எனவே இந்தப் படத்திலிருந்து நான் விலகிவிட்டேன். தயாரிப்பாளரிடம் சுமூகமாக பேசித்தான் படத்திலிருந்து விலகினேன். சொல்லப்போனால் முறை மாப்பிள்ளை படத்தில் 25 சதவீதம்தான் எனது பங்களிப்பு இருக்கும். பெயர் மட்டும்தான் என்னுடையது அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதனால்தான் எனது இரண்டாவது படமாக எப்போதும் உள்ளத்தை அள்ளித்தா படத்தைத்தான் நினைத்துக்கொள்வேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X