முதலில் காமெடியில் சம்பாதிங்க, அப்புறம் ஹீரோவாகி தொலைக்கலாம்: சுந்தர் சி.

By Siva

Recommended Video

நட்பே துணை ட்ரைலர் லான்ச்: பின் விளைவு தெரியாம ஒத்துக்கிட்ட ஆதி- சுந்தர்.சி பேச்சு- வீடியோ

சென்னை: முதலில் நல்லா காமெடி பண்ணி சம்பாதித்துவிட்டு அதன் பிறகு ஹீரோவாகி பணத்தை தொலைக்கலாம் என்று எருமசாணி விஜய்க்கு சுந்தர் சி. அறிவுரை வழங்கியுள்ளார்.

புதுமுகம் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் நட்பே துணை. சுந்தர் சி., குஷ்பு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சுந்தர் சி. கலந்து கொண்டு பேசினார்.

அப்பொழுது அவர் கூறியதாவது,

ஆதி

ஆதி

நான் நெட்டில் பார்த்து ரசித்த நிறைய பேர் இங்கு இருக்கிறார்கள். விக்னேஷ், பிஜிலி ரமேஷ், தங்கதுரை, கோவை ராஜ்மோகன் சார், கோயம்புத்தூரில் இருந்து அந்த காலத்தில் பாக்யராஜ் சார், சத்யராஜ் சார் வந்தாங்க. அதன் பிறகு மஞ்சள் பையை தூக்கிக் கொண்டு நான் வந்தேன். எனக்கு பின்னாடி ஆதி வந்தார். எங்களை எல்லாம் விழுங்கி சாப்பிடுவது போன்று எருமசாணி விஜய் வந்திருக்கிறார்.

சுந்தர் சி.

சுந்தர் சி.

நான் விஜய்யின் தீவிர ரசிகன். எருமசாணி பார்த்து ரசித்தேன். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆதியும், பார்த்திபனும் படத்தை போட்டுக் காட்டினார்கள். அதில் விஜய் என்னை மிகவும் ஈர்த்தார். மீசைய முறுக்கு படத்தில் முதல் 5 நிமிடத்தில் ஷாராவும், ஆர்.ஜே. விக்னேஷும் என்னை எப்படி இம்பிரஸ் செய்தார்களோ அப்படியே விஜய் பண்ணினார்.

ஹீரோ

ஹீரோ

விஜய் இப்படியே காமெடி செய்து கொண்டிருந்தால் தமிழில் மிகப் பெரிய இடம் உள்ளது. ஆனால் நம்மாளுக விட மாட்டாங்க. ஹீரோவாக நடிக்க கூட்டிட்டு போயிடுவாங்கன்னு நினைக்கிறேன். நம்மாளுக ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டை ஆர்டிஸ்ட்டாக இருக்க விட மாட்டாங்க. அவங்களுக்கு எது எல்லாம் தேவை இல்லையோ அதில் எல்லாம் கூட்டிட்டு போய் அவங்களின் வாழ்க்கையை காலி பண்ணுவாங்க. கொஞ்ச நாளாவது காமெடி பண்ணி நல்லா சந்தோஷமாக இருங்க விஜய். நல்லா சம்பாதித்துவிட்டு அதன் பிறகு ஹீரோவாகி பணத்தை தொலைக்கலாம்.

ஆதி

ஆதி

மீசைய முறுக்கு படம் தயாரித்த போதே அந்த படம் நன்றாக போனால் அவருக்கு பல வாய்ப்புகள் வரும். ஒரு வேளை படம் ஓடாவிட்டால் உடனே அவரை வைத்து இன்னொரு படம் எடுக்க வேண்டும் என்று நானும், என் மனைவி குஷ்புவும் பேசினோம். ஆண்டவன் புண்ணியத்தில் படம் ஹிட்டானது. அதில் எனக்கு சந்தோஷம். ஆதியை தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தது.

கதை

கதை

நான் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தபோது ஆதி போன் செய்து அண்ணா ஒரு நல்ல கதை இருக்கு, கேட்கிறீர்களா என்றார். அந்த கதையை கேட்டதும் ரொம்ப பிடித்துவிட்டது. என் படங்களில் ஆடியன்ஸ் எதிர்பார்ப்பது என்டர்டெயின்மென்ட் அங்கு நான் கருத்து சொன்னால் அன்பே சிவம் போன்று ரிசல்ட் கொடுத்துவிடுகிறார்கள். நட்பே துணை கதையில் காதல், காமெடி, எமோஷன், சென்டிமென்ட் இருக்கிறது. முழு படத்தையும் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது. அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர் என்றார் சுந்தர் சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X