பிரம்மாண்ட செட்டில் மிரட்டும் பேய்.. சென்னையில் தொடங்கியது சுந்தர்.சியின் அரண்மனை 3 ஷூட்டிங்!

By

சென்னை: சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது.

வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அரண்மனை.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த பேய் படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார்.

மூன்றாம் பாகம்

மூன்றாம் பாகம்

இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் வெளியானது. இதில், த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் பேசப்பட்டது. இந்நிலையில், இதன் மூன்றாம் பாகத்தை சுந்தர். சி இப்போது இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார்.

ராஷி கண்ணா

ராஷி கண்ணா

சுந்தர்.சி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயின்களாக, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிக்கின்றனர். ராஷி கண்ணா, தமிழில், இமைக்கா நொடிகள். அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர். இந்தப் படத்தில் விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

காமெடி பேய்

காமெடி பேய்

இந்தப் பேய் படமும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருகிறது. இதன் ஷூட்டிங், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கியது. கொரோனா காரணமாக தடைப் பட்டதால் படக்குழு சென்னை திரும்பியது. இந்நிலையில் இதன் ஷூட்டிங் சென்னையில் மீண்டும் தொடங்கி இருக்கிறது.

 பிரம்மாண்ட செட்

பிரம்மாண்ட செட்

பூந்தமல்லி அருகே பிரம்மாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷாலுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை முடித்த ஆர்யா, இதன் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். நடிகை ராஷி கண்ணா தனது சமூக வலைதளத்தில் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X