Aranmanai 4 :இறுதிக்கட்ட சூட்டிங்கில் அரண்மனை 4.. சைலண்டாக சூட்டிங்கை முடித்த சுந்தர் சி!

சென்னை : நடிகர் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் அரண்மனை 4.

இந்தப் படத்தின் சூட்டிங கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sundar Cs Aranmanai 4 movie shooting nearing its climax

க்ளைமாக்சை நெருங்கிய அரண்மனை 4 சூட்டிங் :அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகி வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் ஒருசேர பெற்றது. இந்த பாகங்களில் சந்தானம் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். ஆன்ட்ரியா, ராஷி கண்ணா, ஹன்சிகா, சுந்தர் சி, சித்தார்த், வினீத் போன்ற நடிகர்களும் இந்த மூன்று பாகங்களில் நடித்து சிறப்பான கவனத்தை பெற்றனர். இந்தப் படம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சுந்தர் சிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

இந்நிலையில் காபி வித் காதல் படம் நல்ல வரவேற்பை அவருக்கு பெற்றுத்தரவில்லை. இதனால் அவருக்கு எப்போதும் கைக்கொடுத்துவரும் அரண்மனை படத்தையே அவர் மீண்டும் கையிலெடுத்துள்ளார். இந்தப் படத்தின் 4வது பாகத்தை தயாரிக்கவுள்ளதாக அவர் அறிவித்து, நாயகனாக விஜய் சேதுபதி மற்றும் நாயகிகளாக தமன்னா, ராஷி கண்ணாவை அறிவித்தார். ஆனால் முதலில் இந்தப் படத்தில் கமிட்டான விஜய் சேதுபதி, தவிர்க்க முடியாத காரணங்களால் படத்திலிருந்து விலகினார்.

Sundar Cs Aranmanai 4 movie shooting nearing its climax

இதையடுத்து சுந்தர் சியே இந்தப் படத்தின் நாயகனாக களமிறங்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த இரு மாதங்களாக விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் நடிகை தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளதாகவும் சமீபத்தில் அவரது கவர்ச்சி நடனம் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சென்னை ஈசிஆரில் தற்போது மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கொச்சியில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் 90 சதவிகித சூட்டிங் நடந்து முடிந்துள்ளதாகவும் இன்னும் 10 சதவிகித சூட்டிங் மட்டுமே பாக்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தப் படத்தை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sundar Cs Aranmanai 4 movie shooting nearing its climax

எப்போது மற்ற ஹீரோக்களை மையமாக வைத்தே அரண்மனை படத்தின் முந்தைய பாகங்களை எடுப்பார் சுந்தர் சி. பேய்களின் கொட்டத்தை அவர் அடக்குவதாக காட்சிகள் அமையும். ஆனால் இந்த முறை அவரே ஹீரோவாக களமிறங்கியுள்ளது அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் மிரட்டலான தமன்னாவை பார்க்க முடிகிறது. படத்தில் யோகிபாபு, வடிவேலு, மீனா, கே பாக்கியராஜ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X