அலற வைக்கும் ஆண்டிரியா , அட்டகாசம் செய்யும் கோவை சரளா, அழகால் மிரட்டும் ஹன்சிகா- “அரண்மனை”!
சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் பேய் படங்களுக்கு எப்படியாவது கூட்டம் சேர்ந்துவிடும். அப்படி ஜெகன் மோகினி காலத்தில் இருந்து, இன்றைய காஞ்சனா வரை அதுதான் எழுதப்படாத சினிமா லாஜிக்.
அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள பேய்ய்ய்... படம்தான் "அரண்மனை".
காமெடிக்குப் பெயர் போன சுந்தர்.சியின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்துள்ள இப்படத்தில், சந்தானம், கோவை சரளா, மனோபாலா, வினய், ஹன்சிகா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா என்று ஒரு நட்சத்திரப்பட்டாளமே கொட்டிக் கிடக்கின்றது.

கோவை சரளாவின் காதல்:
பழமையான அரண்மனையின் வாரிசுகளில் ஒருவர்தான் நம்ம கோவை சரளா. அவர் மனோபாலாவை காதலித்து, அரண்மனையை விட்டு ஓட்டம் பிடித்து விடுகின்றார்.

அரண்மனையை விற்க பிளான்:
இந்நிலையில் வினய் மற்றும் அவரது மனைவியான ஆண்ட்ரியா சில காரணங்களுக்காக அந்த அரண்மனையை விற்பதற்காக வருகின்றனர்.

பேய் பிடிக்கும் யாரோ:
உறவினர்கள் நிறைந்திருக்கும் அந்த வீட்டில் யாரோ ஒருவருக்கு பேய் பிடித்து விடுகின்றது.

அட்டகாச அலப்பறைகள்:
அதன்பின்னர் அந்த பேய் பண்ணும் அலப்பறைகளும், பேய்க்கு பயந்து நம்ம கோவை சரளா அண்ட் கோ பண்ணும் அட்டாகாசங்களும்தான் மீதிக்கதை.

கிராமத்து தேவதை ஹன்சிகா:
இதில் பிற்பாதி பிளாஷ்பேக்கில் அழகான கிராமத்துக் குயிலாக வருகிறார் ஹன்சிகா. ஆண்டிரியாவிற்கு அண்ணனாகவும், வக்கீலாகவும் வந்து அரண்மனையில் நடக்கும் பேய் பற்றிய விஷயங்களை ஆராய்ந்து கண்டறியும் பாத்திரத்தில் சுந்தர்.சி.

இப்போ இது போதும்:
ஹை...அவ்ளோதான் இதுக்குமேலலாம் கதை சொல்ல முடியாது. தியேட்டர்ல பார்த்துக்கோங்க.

குறைவில்லாத காமெடி:
கோவை சரளா, சந்தானம் என்று காமெடி கோஷ்டியே இருப்பதால் காமெடிக்கு ஒன்றும் குறைவில்லை. பரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அவ்வளவாக மனதில் நிறையவில்லை.

அழகாய் விளையாடும் கேமரா:
செந்தில்குமாரின் ஒளிப்பதிவுதான் படத்திற்கே பலமாகத் திகழ்கின்றது. அரண்மனையையும், பேயையும் கூட அழகாகக் காட்டியுள்ளது கேமரா.

ஜெயிச்சுப்புட்டீங்க போங்க:
அரண்மனையில் பேய் என்ற கதைக்களம் பலர் எடுத்திருந்தாலும், பார்க்கப் பார்க்க சலிக்காத பேய் கான்செப்ட் எடுத்து சுந்தர்.சி கல்லாவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பதுதான் உண்மை.


Click it and Unblock the Notifications











