கவுண்டமணி, வடிவேலு, விவேக்... இப்போ சந்தானம்.. இது சுந்தர் சியின் காமெடி கூட்டணிகள்

By Shankar

நகைச்சுவை கலந்த ஆக்ஷன் அல்லது காதல் படங்களைத் தருவதில் சுந்தர் சிக்கு இணையில்லை இன்றைய தேதிக்கு. அவரது அனைத்துப் படங்களுமே, அது பேய்ப் படமாகவே இருந்தாலும் அதிகபட்ச சிரிப்புக்கு உத்தரவாதம் உண்டு.

சுந்தர் சியின் விசேஷம், மாறும் ரசனை அல்லது காலகட்டத்துக்கேற்ப தனது காமெடி கூட்டணிகளையும் மாற்றிக் கொள்வார்.

கவுண்டமணி

கவுண்டமணி

முறைமாமன் படத்தில் ஆரம்பித்து கண்ணன் வருவான் படம் வரை சுந்தர் சியின் ஆஸ்தான காமெடியன் கவுண்டமணிதான். கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கும் மேல், இந்தக் கூட்டணியில் வந்து வயிற்றைப் பதம் பார்த்தது. மேட்டுக்குடி, ஜானகிராமன் போன்ற படங்களில் கவுண்டமணியின் காமெடி உச்சம்.

வடிவேலு

வடிவேலு

அடுத்து வின்னர் படத்திலிருந்து வடிவேலுவுடன் கூட்டணி அமைத்தார் சுந்தர். இதுவும் பெரிய வெற்றிக் கூட்டணிதான். குறிப்பாக கிரி, தலைநகரம், நகரம் படங்களை எப்போது பார்த்தாலும் சிரிப்பு ஓயாது!

விவேக்

விவேக்

சுந்தரின் ஆஸ்தான காமெடியன்களில் ஒருவர் விவேக். சுந்தர் இயக்கிய படங்களிலும் நடித்தார், அவர் இயக்காமல் ஹீரோவாக நடித்த ஆயுதம் செய்வோம் போன்ற படங்களிலும் கலக்கினார்.

சந்தானம்

சந்தானம்

இந்த வரிசையில் சுந்தர் சியின் லேட்டஸ்ட் காமெடிக் கூட்டணி சந்தானத்துடன். சுந்தர் சி கேட்டால் எப்படிப்பட்ட சூழலிலும் கால்ஷீட் தருவாராம் சந்தானம். காரணம் கலகலப்பு படத்தில் அவருக்கு சுந்தர் தந்த வேடம்.

அரண்மனை

அரண்மனை

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை படம் இத்தனை பெரிய வரவேற்பைப் பெற்றதற்கு சந்தானத்தின் மிகச் சிறந்த காமெடியும் காரணம்.

ஆம்பள

ஆம்பள

அரண்மனை' படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி வரும் படம் ‘ஆம்பள'. இதில் விஷால் நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தில் காமெடி வேடத்தில் சதீஷ் நடித்து வருகிறார்.

சந்தானமும் உண்டு

சந்தானமும் உண்டு

இவர் நடிப்பதால் சந்தானம் இப்படத்தில் நடிக்கமாட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது சந்தானமும் இப்படத்தில் நடிக்கிறார். ஆம்பள படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் சந்தானம் கடைசியாக இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

சுந்தர் உறுதி

சுந்தர் உறுதி

ஆம்பள படத்தில் சந்தானம் நடிப்பதை இயக்குநர் சுந்தர் சியே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இப்படத்தை பொங்கலன்று வெளியிடப்போவதாகவும் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X