கோடையில் திகில் விருந்து... அடுத்த பேய் பட ரிலீசுக்கு தயாராகும் சுந்தர்.சி
சென்னை : பொழுதுபோக்கு நிறைந்த நகைச்சுவை படங்களை கொடுத்து புகழ் அடைந்தவர் டைரக்டர் சுந்தர்.சி. ஆரம்பத்தில் நகைச்சுவை படங்களை மட்டும் இயக்கிய சுந்தர்.சி, பிறகு ஆக்ஷன் மற்றும் பேய் படங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டார்.
அரண்மனை, அரண்மனை 2 என இரண்டு பேய் படங்களை சுந்தர்.சி தானே இயக்கி, நடித்தார். இந்த இரண்டு படங்களுமே மிகப் பெரிய வெற்றியை பெற்றன. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக அரண்மனை 3 படத்தையும் இயக்கி, அதை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளார் .

வரும் மே மாதத்தில் கோடை விருந்தாக இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அரண்மனை முதல் பாகத்தில் வினய், இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்ததை போல், மூன்றாம் பாகத்தில் ஆர்யா நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் ராஷி கன்னா, ஆன்டிரியா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சுந்தர்.சி.,யும் நடித்துள்ளார். இப்படத்திற்கு சி.சத்தியா இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











