அடுத்த ஆக்‌ஷனுக்கு ஆள் ரெடியாகிட்டார் போல.. பிகில் நடிகருடன் மோதும் சுந்தர்.சி!

Recommended Video

ACTION MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள இருட்டு படம் விரைவில் ரிலீசாகிறது. அதன் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு சுந்தர்.சி நாயகனாக நடித்த அரண்மனை 2 மற்றும் முத்தின கத்தரிக்காய் படங்கள் வெளியாகின. அதற்கு பிறகு தற்போது சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள இருட்டு படம் ரிலீசாகிறது.

ஆக்‌ஷன் கலெக்‌ஷன்

ஆக்‌ஷன் கலெக்‌ஷன்

விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகான்க்‌ஷா புரி, ராம்கி, சாயா சிங், கபிர் சிங் துஹான், பழ. கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை சோலோ ரிலீசான ஆக்‌ஷன் படம் முதல் நாளில் உலகளவில் 3.75 கோடி வசூலையும் இரண்டாவது நாளான நேற்று 4 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியுள்ளதாம்.

லாபம் கிடைக்குமா?

லாபம் கிடைக்குமா?

சுந்தர்.சி இயக்கத்தில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சுமார் 55 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை தர இன்னும் 4 அல்லது 5 வாரம் வெற்றிகரமாக ஓடவேண்டும் என பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விஷால் படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஆக்‌ஷன் படம், எதிர்பார்த்த லாபத்தை கொடுக்குமா என்பது சந்தேகம் தானாம்.

எப்போ ரிலீஸ்?

ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி நடிப்பில் வெளியாகவுள்ள பேய் படமான இருட்டு வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகிறது. அஜித்தின் முகவரி படத்தை இயக்கிய V.Z. துரை இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சாய் தன்ஷிகா, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பிகில் நடிகருடன் போட்டி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் ஃபுட் பால் கோச்சாக நடித்த கதிர் நடிப்பில் ஃபுட்பால் மற்றும் பேய் படமாக உருவாகியுள்ள ஜடா படமும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு மற்றும் கேப்மாரி படமும் ரிலீசாகிறது. இதனால், டிசம்பர் 6ம் தேதி பலத்த போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X