'தீயா வேலை செய்யணும் குமாரு'

இந்தப் படத்தின் நாயகனாக சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுந்தர் சி படத்தில் நடிப்பது சித்தார்த்துக்கு இதுதான் முதல்முறை.
இப்போது விஷால் - அஞ்சலி - வரலட்சுமி நடிப்பில் மத கஜ ராஜாவை முடித்துவிட்ட சுந்தர் சி, அந்தப் படத்தை பொங்கலுக்கு வெளியிடவிருந்தார். ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப் போகிறது.
அதற்காக காத்திருக்க விரும்பாத சுந்தர், வேக வேகமாக தனது அடுத்த படத்தின் பணிகளை ஆரம்பித்துவிட்டார். படத்தின் தலைப்பு - தீயா வேலை செய்யணும் குமாரு!
படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பவர் ஹன்ஸிகா. இவர்கள் இருவரும் ஏற்கெனவே தெலுங்கில் இணைந்து நடித்துள்ளனர்.
காமெடிக்கு சுந்தர்சியின் இப்போதைய ஆஸ்தான காமெடியன் சந்தானமும் கைகோர்க்கிறார். முழுக்க முழுக்க காமெடிக் கதம்பமாக படம் உருவாகிறது.
அரசியல் மேடை, அவ்வப்போது கருத்து சொல்வது என பரபரப்பாக இருக்கும் குஷ்புதான் படத்தின் தயாரிப்பாளர்!


Click it and Unblock the Notifications











