சுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா
சென்னை : டைரக்டர் சுந்தர்.சி, ஜெய்யுடன் முதல் முறையாக ஒரு படத்தில் இணைய உள்ளார். ஆனால் இவர்கள் இணையும் படத்தை சுந்தர்.சி இயக்க போவதில்லையாம். டைரக்டர் பத்ரி தான் இயக்க உள்ளார்.
ஜுலை 12 ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த படம் முழுவதும் புதுச்சேரியில் தான் படமாக்கப்பட உள்ளதாம். படம் பற்றிய மற்ற விபரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

சுந்தர்.சி தற்போது கோலிவுட்டின் புகழ்பெற்ற பேய் படமான அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் ஆர்யா, ராஷி கன்னா, ஆன்டிரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
அதே சமயம் நடிகர் ஜெய், கேப்மாரி படத்தில் நடித்து வருகிறார். இது இவரின் 25 வது படம். அதனால் இவ்விரு நடிகர்களின் படங்களும் முடிந்த பிறகே, பத்ரி இயக்கும் புதிய படத்தின் வேலைகள் முழுவீச்சில் துவங்கப்படும்.


Click it and Unblock the Notifications











