கெட்டது தெரிஞ்ச நல்லவனா இரு... சுந்தர் சியோட சூப்பர் அட்வைஸ்
சென்னை : நடிகர் சுந்தர் சி சிறப்பான பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது பட்டாம்பூச்சி படம் ரிலீசாக உள்ளது. அவருடன் இணைந்து நடிகர் ஜெய் இந்தப் படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார்.

இயக்குநர் சுந்தர் சி
இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து மிரட்டும் வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது பட்டாம்பூச்சி. படத்தில் கொடூரமான சைக்கோ கொலைகாரனாக நடிகர் ஜெய் நடித்துள்ளார். இதுவரை அவரை அமைதியான நாயகனாக பார்த்து பழக்கப்பட்ட நமக்கு வித்தியாசமான கேரக்டரில் அவர் காட்சி கொடுக்க உள்ளார்.

சைக்கோ கொலைகாரன் ஜெய்
முதல்முறையாக ஜெய் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சைக்கோ கொலைகாரனாக படத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள நிலையில், அவரை சட்டத்தின் முன்பு நிறுத்த துடிக்கும் காவல் அதிகாரியாக சுந்தர் சி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரது அவ்னி டெலி மீடியா சார்பில் குஷ்பூ தயாரித்துள்ளார்.

1980களின் கதை
1980களில் நடக்கும் கதையாக பட்டாம்பூச்சி உருவாகியுள்ளது. படத்தில் மேலும் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை எழுதி இயக்கியுள்ளார் பத்ரி. நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். படம் விறுவிறுப்பாக உருவாகியுள்ளதாகவும் சைக்கோ த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் பத்ரி தெரிவித்துள்ளார்.

பட்டாம்பூச்சி பட டீசர் வெளியீடு
சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வித்தியாசமான வகையில் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது. அடுத்த மாதம் படம் ரிலீசாக உள்ள நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

மிரட்டலான காட்சிகள்
மேலும் டீசரின் ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாக அமைந்துள்ளன. ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளது. சுந்தர் சி மற்றும் ஜெய் இருவரும் நாயகன் மற்றும் வில்லனாக இருந்த போதிலும், ஜெய்க்கு இணையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. படத்தின் ஒரு பாட்டுக்கு ஜெய் இசையமைத்துள்ள நிலையில் இசையமைப்பாளர் தேவா பாடலை பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











