சுந்தர் சியோட தலைநகரம் படம் நியாபகம் இருக்கா.. இப்போ 2ம் பாகத்தோட சூட்டிங்கே முடிஞ்சாச்சு!
சென்னை : நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி தற்போது காபி வித் காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் பட்டாம்பூச்சி என்ற சைக்கோ த்ரில்லர் கதை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பட்டாம்பூச்சி படம்
நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி நடிப்பில் சமீபத்தில் வெளியானது பட்டாம்பூச்சி படம். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப்படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் கடந்த வாரத்தில் வெளியானது. படத்தில் சைக்கோ வில்லனாக ஜெய் நடித்திருந்தார்.

19 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் நாளைய தினம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சி-யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும இந்தப் படத்தில் இணைந்துள்ளது. காமெடி கலாட்டாவாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

சூட்டிங் நிறைவு
சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு உதகையில் நிறைவு பெற்றது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுந்தர் சி நடிப்பில் உருவாகிவந்த தலைநகரம் 2 படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழு கொண்டாட்டம்
சுந்தர் சியின் இருட்டு படத்தை இயக்கிய துரை இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கடந்த 2006ல் சுந்தர் சி முழுநீள நாயகனாக நடித்து வெளியானது தலைநகரம்.

அடுத்தடுத்த அறிவிப்புகள்
இந்நிலையில் தற்போது இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பு வெளியானதுடன் படம் குறித்த அப்டேட்டும் இல்லாமல் சைலண்டாக படப்பிடிப்பையே நடத்தி முடித்துள்ளார் துரை.


Click it and Unblock the Notifications











