வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு முன்பாக அந்த காமெடியன் நடிக்க வேண்டியதா?.. சுந்தர். சி பளிச் பேட்டி!

சென்னை: கவுண்டமணி முதல் யோகி பாபு வரை தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து காமெடி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார் சுந்தர் சி. ஆரம்பத்தில் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றிய சுந்தர் சி அருணாச்சலம் படத்தில் வெறும் செந்திலை மட்டும் வைத்து கலக்கி இருப்பார்.

விவேக், சந்தானம் மற்றும் யோகி பாபு என பல காமெடி நடிகர்கள் சுந்தர் சி இயக்கத்தில் நடித்துள்ளனர். அரண்மனை 4 திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்தப் படத்தின் புரமோஷனுக்காக சுந்தர் சி சமீபத்தில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

Sundar C says Vivekh is the first choice for Winner movie

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்த சுந்தர் சி வின்னர் படத்தில் முதலில் நடிகர் விவேக்கை தான் நடிக்க வைக்க திட்டமிட்டதாக கூறினார். ஆனால், கடைசி நேரத்தில் அந்தவொரு பிரச்சனை காரணமாக வடிவேலு அந்த படத்தில் நடித்தார் என்றார்.

வின்னர் கைப்புள்ள: கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண் நடிப்பில் வெளியான வின்னர் படத்தில் நம்பியார், வடிவேலு, ரியாஸ் கான் என பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். சுமார் 21 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் அந்த படத்தின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. அந்தப்படத்தில் கைப்புள்ள கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பார் வடிவேலு.

விவேக்குடன் பிரச்சனை: வின்னர் படத்தில் வடிவேலுக்கு பதிலாக முதலில் விவேக் சாரை தான் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு சில பிரச்சினை காரணமாக அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கும் அவருக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்தோம். வீராப்பு படத்துக்காக இயக்குநர் விவேக் சார்தான் வேண்டும் என கேட்க நான் எப்படி அவரிடம் பேசப் போகிறோம் என தயங்கி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகுது என்கிற கான்செப்ட்டுடன் ஒரு காமெடி ட்ராக் இருக்கு சார் பண்ண முடியுமா? எனக் கேட்டேன். அவர் உடனடியாக எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து அரண்மனை 3 படம் வரை பல படங்களில் பணியாற்றி உள்ளேன்.

Sundar C says Vivekh is the first choice for Winner movie

கை உடைஞ்ச மாதிரி இருக்கு: விவேக் சார் ரொம்ப ஹெல்த் கான்சியஸ் எப்போதுமே ஜாகிங், வாக்கிங் செல்லக்கூடிய நபர், அரண்மனை 3 படத்தை குஜராத் பக்கத்தில் ஒரு கிராமத்தில் எடுத்துக் கொண்டிருந்தோம் அங்கேயும் அவர் தினமும் வாக்கிங் சென்று வருவார். கடைசியாக டப்பிங் பேசி விட்டு சென்ற அவர், ஒரு சின்ன மிஸ்டேக் ஆகிடுச்சு மன்டே வந்து பேசுறேன்னு சொன்னாரு, அதன் பின்னர் அவர் உயிர் பிரிந்து விட்டதை அறிந்து ரொம்பவே மனம் உடைந்து போய் விட்டேன். விவேக் சார், மனோபாலா சார் எல்லாம் இல்லாதது ஒரு கை உடைஞ்சு போன மாதிரி இருக்கு எனக்கு என சுந்தர் சி ரொம்பவே ஃபீல் செய்து பேசி்யுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X