நாளைக்கு படம் ரிலீஸ்... கிளைமாக்ஸில் பெரிய தவறு.. அரண்மனை வெளியாகுமானு பயந்தேன்.. சுந்தர் சி பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான சுந்தர் சி, ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்றும் தொடர்ந்த கமர்ஷியல் படங்களை கொண்டிருக்கும் சுந்தர் சி, அரண்மனை படத்தின் பைனல் வெர்சனை பார்த்தேன், அதில் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தேன், படம் வெளியாகுமோ ஆகாதோ என்ற பயமே வந்துவிட்டது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் என தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் களமிறங்கி மாஸ் காட்டி வருகிறார். இவரது படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லும் அளவிற்கு, படத்தில் காமெடி நிறைந்து இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் தான் 12 வருடம் கழித்து வெளியான மதகஜராஜா படம்.

sundar c interview madhagajaraja

மதகஜராஜா: விஷால், சந்தானம், வரலட்சமி, அஞ்சலி நடித்த இத்திரைப்படம், 2013ம் ஆண்டு வெளியாக இருந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து, 12 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இவ்வளவு தாமதமாக வெளியான ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது. இதுவே முதன் முறை, அதற்கு காரணம், இந்த படத்தில் இருந்த காமெடிதான். இந்த படத்தில் காமெடியான நடித்த, சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வரும், நிலையில், மீண்டும் அவர் காமெடியான வர வேண்டும் என்று சொல்ல வைத்தது, மதகஜராஜா படம்.

சுந்தர் சி பேட்டி: இந்நிலையில் சமீபத்திய பேட்டி அளித்த சுந்தர் சி தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா பயணம் என பல பற்றி பேசி இருந்தார். அதில், என் சினிமா கேரியரில் நான் ரொம்ப பயந்த படம் எது என்று கேட்டால், அது அரண்மனை 2 தான். படம் நாளைக்கு வெளியாக இருக்கும் நிலையில் பைனல் வெர்ஷனை நான் என் குடும்பத்தினருடன் இரவு பார்த்து கொண்டு இருக்கிறேன். காலையில் 11:30 மணிக்கு படம் தியேட்டரில் வெளியாக வேண்டும் ஆனால், படத்தினுடைய முக்கியமான போர்ஷன் கிளைமாக்ஸ் பார்த்து என் இதயமே நின்றுவிட்டது போல ஆகிவிட்டது. சில டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பாடலில், கிரீன், ரெட் கலர் ஏறி இருக்கிறது. பாடலின் லெவல் கம்மியாகி பாடல் லைட்டாக கேட்கிறது.

மொத்தமும் போச்சு: அதை திரையில் பார்த்துவிட்டு என் தலை சுற்றிவிட்டது, ஏனென்றால் ஒரு படத்தினுடைய முக்கியமானது கிளைமாக்ஸ் காட்சிதான். படத்தினுடைய ஜீவனே அந்த கிளைமாக்ஸ் காட்சி தான். அதைப் பார்த்ததும் ஆகா நம்மளுடைய லைஃப் காலி, மொத்தமும் போச்சு என்று நினைத்தேன். என்னை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு படத்தையும் என்னுடைய லைஃப் போல தான் நான் பார்ப்பேன். இந்த படம் ஓடவில்லை என்றால் அடுத்து நம்ம வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணமே எனக்கு வந்துவிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சில மாற்றத்தை செய்து அந்த படத்தை வெளியிட்டேன். அன்று இரவு நடந்ததை நினைத்தால் இப்போதும் பயமாக இருக்கிறது என சுந்தர் சி அந்தபேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X