நீ எல்லாம் ஏன்டா ஆடுற.. ஜெயிச்சவங்க என்ன சொன்னாலும் கேப்பேன்.. சுந்தர் சி பேட்டி!
சென்னை: பாலசந்தர், பாரதிராஜா எல்லாம் எப்படி படத்தை எடுத்துவிட்டு அமைதியாக இருந்தார்கள். ஆனால், ஒரு படம் எடுத்துவிட்டு சினிமானா என்னனு தெரியுமா என்று பேசுகிறார்கள், அவர்களை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. நீ எல்லாம் ஏன்டா ஆடுற என்று தான் சொல்லத் தோன்றுகிறது என்று சுந்தர் சி பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 மே 3ந் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டது. அந்த படத்தில், யோகிபாபு, ராஷிகண்ணா, தமன்னா, கோவை சரளா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படம், உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான எந்த படமும் 100 கோடி வசூலை எட்டாத நிலையில், அரண்மனை4 திரைப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால், சுந்தர் சி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ஒரு படம் எடுத்துட்டு ஆடுறாங்க: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சுந்தர் சி, பாலசந்தர், பாரதிராஜா தன் படத்தில், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு சாதனை படைத்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட படத்தை எடுத்த அவர்களே அமைதியாக இருக்கும் போது, நீ எல்லாம் ஏன்டா ஆடுற என்று தான் சொல்லத்தோன்றுகிறது. இன்னைக்கு பலரை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஒரு படம் எடுத்துவிட்டு சினிமானா என்னனு தெரியுமா என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். நான் இதுவரை அவ்வளவாக இன்டர்வியூ கொடுத்து இருக்கமாட்டேன். அந்த நேரத்தில், படத்தை பற்றியோ இல்ல, காட்சி பற்றியோ யோசிக்கலாமா என்று நினைப்பேன்.
அருணாசலம்: அதே போல நான் ஜெயித்தவர்கள் என்ன சொன்னாலும் கேட்பேன், அது போலத்தான் அருணாசலம் படத்தில் ரஜினி, ஒரு மாசத்துல தன்னிடம் இருக்கும் பணத்தை செலவு செய்துவிட வேண்டும். இதற்காக, அவர் பைவ் ஸ்டார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி பணத்தை தண்ணி போல செலவு செய்கிறார். கடைசி நாளில் பணம் மொத்தமும் செலவு ஆகிவிட, அந்த பைவ் ஸ்டார் ஓட்டலை விட்டு போவது போல காட்சியை யோசித்து வைத்து இருந்தேன்.
அப்போது ரஜினி, அந்த சீனில், அவராக வெளியில் செல்வது போல வேண்டாம், பைவ் ஸ்டார் ஓட்டலில் வேலை செய்பவர் அனுப்புவது போல காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். உடனே நான் சார், அது எப்படி சார், நல்லா இருக்காதே என்றேன், நீங்க வைங்க கண்டிப்பா நல்லா இருக்கும் என்றார். அவர் சொன்னது போலவே அந்த காட்சியை படத்தில் வைத்தேன். அந்த படத்தில் அதுதான் செண்டிமென்ட் காட்சியாக இருந்தது என்று சுந்தர் சி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











