Rajini X Sundar C: ரஜினியை வம்புக்கு இழுக்கிறாரா சுந்தர் சி? பிரச்னை இன்னும் ஓயல போலயே? அதை கவனிச்சீங்களா?

சென்னை தமிழ் சினிமாவில் பஞ்சாயத்துகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. கதைகளுக்கும், இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்கள், நடிகைகளுக்கும் கூட பஞ்சம் வரும் ஆனால் பஞ்சாயத்துகளுக்கு என்றைக்குமே பஞ்சம் வந்ததே கிடையாது. இந்த அளவுக்கு பில்டப் கொடுக்கும் அளவுக்கு இப்போது என்ன பஞ்சாயத்து என்று கேட்கிறீர்களா? இயக்குநர் சுந்தர் சி, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கவிருந்த படத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிய கதை அனைவருக்கும் தெரிந்தது தான். அதன் பின்னர் எல்லாம் முடிந்தது என்று பார்த்தால் பஞ்சாயத்து வேறு வடிவத்தில் உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 173 வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாகவும் படத்தை சுந்தர் சி இயக்குவதாகவும் பேச்சுக்கள் முதலில் அடிபட்டது. அதை உறுதி செய்யும் வகையில் மூவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. இந்த அறிவிப்பு வெளியாகி அடுத்த வாரத்தில் தான் படத்தில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்தார் சுந்தர் சி. இது தொடர்பாக கமல்ஹாசனிடம் கூட அவர் கலந்து பேசவில்லை என்று கமல்ஹாசனே தெரிவித்துள்ளார்.

Sundar C vs Rajini A New Controversy Brewing Over Double Occupancy

இப்படி இருக்கையில் ரஜினிக்கும் சுந்தர் சிக்கும் இடையில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு விட்டது அதனால் தான் சுந்தர் சி வெளியேறிவிட்டார் என்றும் பேச்சுகள் அடிபட்டது. இப்படி இருக்கும்போது, தற்போது சுந்தர் சி தயாரிப்பில் டபுள் ஆக்குபன்ஸி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.

பஞ்சாயத்தா?: இந்த படத்தின் புரோமோ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ப்ரோமோ டீசரில் ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்கிறார், மற்றொரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். இதில் என்ன என்றால் அந்த ஆணும் பெண்ணும் காதலிப்பது ஒரே நபரை. அந்த நபரின் பெயர் ரஜினி. இது தொடர்பான புரோமோ வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Sundar C vs Rajini A New Controversy Brewing Over Double Occupancy

சும்மா இருக்குமா?: சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ ரஜினி என்ற பெயர் என்பது சாதாரணமாக பயன்படுத்தப்படாது. அந்த பெயர் பயன்படுத்த ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த படத்தில் ரஜினி என்ற பெயர் கொண்ட ஆண் மற்றும் பெண் என இரு கதாபாத்திரங்கள் வருவதால் இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது தொடர்பாக ரஜினிகாந்த் வழக்கு தொடுத்தாலும் எதிர்ப்பு கிளம்பினாலும் அது படத்தின் விளம்பரம் தான் என்று சிலர் பேசி வருகிறார்கள்.

சுந்தர் சி: மேலும் ரஜினிகாந்த் வழக்கு தொடுத்தாலும், அவரது முழுப்பெயர் ரஜினிகாந்த். எனவே ரஜினி என்ற பெயரை மட்டும் அவர் உரிமை கொண்டாட முடியுமா என்பதும் கேள்விக்குறி என்று பலர் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் சுந்தர் சி ரஜினியை வம்புக்கு இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எதையும் செய்ய மாட்டார். இந்த பெயர் தேர்வு கூட இயக்குநர் அஸ்வின் கந்தசாமியின் முடிவாகத்தான் இருக்கும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X