ரஜினி - சுந்தர்.சி கூட்டணி முறிவு.. இதே மாதிரி வேற எந்த பெரிய ஹீரோவுக்கு நடந்திருக்கு?.. லிஸ்ட் இதோ
சென்னை: ரஜினி நடிக்கவிருந்த தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் சுந்தர்.சி. அவர் அப்படி வேண்டாம் என்று வெளியே வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தன. அதேசமயம் இதுபோன்று தமிழ் திரைத்துறையில் நடப்பது புதிது இல்லை. இதற்கு முன்னதாகவும் சில பெரிய ஹீரோக்களுடன் ஒரு படத்தில் இணைந்து அதிலிருந்து வெளியேறிய சம்பவம் நடந்திருக்கிறது.
கோலிவுட்டில் சமீபத்தில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் ரஜினியை வைத்து கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி வெளியேறியதுதான். இவர்கள் மூன்று பேரும் இணைகிறார்கள் என்று வந்த அறிவிப்பை அடுத்து அப்படத்தின் மீது ஏகப்பட்ட ஹைப்புகளை உருவாக்கியிருந்தார்கள். அதிலும் நீண்ட நாட்கள் கழித்து ரஜினி ஃபேமிலி ஆடியன்ஸை கவர் செய்யும் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற ஆவல் அதிகரித்தது. ஆனால் சுந்தர்.சி வெளியேற்றத்தால் அது நடக்கவில்லை.
இதற்கு முன்பும் இப்படி: ரஜினி - சுந்தர்.சி கூட்டணி முறிவு எப்படி கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ அதேபோல் இன்னும் சில கூட்டணி முறிவுகளும் கோலிவுட்டில் நடந்திருக்கின்றன. அவையும் இதேபோன்று பெரிய ஹைப்பை க்ரியேட் செய்து பிறகு ஏமாற்றத்தை கொடுத்தவைதான். அப்படி நடந்த சில கூட்டணி முறிவுகளை இதில் பார்க்கலாம்.

விஸ்வரூபம் கூட்டணி: கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தை அறிவித்தபோது அதை முதலில் செல்வராகவன்தான் இயக்குவதாக இருந்தார். கோலிவுட்டில் லெஜண்ட் இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்த செல்வாவும், சினிமாவையே கரைத்து குடித்த கமலும் இணைகிறார்கள் என்று வந்த அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது. நிச்சயமாக இரண்டு பேரும் சேர்ந்து பெரிய மேஜிக்கை நிகழ்த்துவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து செல்வா வெளியேற; கமலே அந்தப் படத்தை இயக்கினார்.
கான் கூட்டணி: அதேபோல் தனுஷை உருவாக்கிய செல்வராகவனும், தனுஷுக்கு போட்டியாக நிறுத்தப்பட்ட சிம்புவும் இணைவதாக இருந்த படம்தான் கான். கான் என்றால் பண்டைய தமிழில் காடு என்று பொருள். எனவே காடும் காடு சார்ந்த கதையுமாக இது உருவாகும் என்று பேசப்பட்டது. சிம்பு பச்சை சட்டை, பச்சை வேட்டி அணிந்து மாலை போட்டபடி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால் இந்தப் படமும் பாதியிலேயே நின்றுவிட்டது.
சூதாடி கூட்டணி: தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கி முடித்த பிறகு சூதாடி என்ற படத்தை இயக்க திட்டமிட்டார் வெற்றிமாறன். இதில் தனுஷுடன் சேர்ந்து பார்த்திபன் உள்ளிட்டோரும் நடித்தார்கள். படத்தின் அறிவிப்பெல்லாம் வந்து சில நாட்கள் ஷூட்டிங்கும் சென்றுவிட்டார்கள். ஆனால் அந்தப் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். மேலும் திரிஷாவை வைத்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை தொடங்கினார் ஸ்டைலிஷ் இயக்குநர் கௌதம் மேனன். அந்தப் படத்தையும் ட்ராப் செய்துவிட்டார்கள்.
வாடிவாசல் கூட்டணி: ரஜினி - சுந்தர்.சி கூட்டணி முறிவுக்கு முன்பு அனைவரிடமும் பேசுபொருளானது என்றால் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணிதான். தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில்தான் இணைந்தார்கள். அறிவிப்பு வந்தது மட்டுமின்றி டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படமும் நடக்கவில்லை. அநேகமாக சூர்யாவுக்கு பதில் வேறு ஒருவரை வைத்து வெற்றி அந்தப் படத்தை எடுக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











