Aranmanai 4 Box Office: கில்லி ரீ ரிலீஸ் முதல் நாள் வசூலை முந்துமா அரண்மனை 4?.. வசூல் கணிப்பு இதோ!

சென்னை: விஜய் நடித்த கில்லி திரைப்படம் மீண்டும் வெளியான நிலையில் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூலை அந்த படம் ஈட்டியது. கடந்த வாரம் வெளியான விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் முதல் நாளில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல் மட்டுமே ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அரண்மனை நான்கு திரைப்படம் கில்லி படத்தின் முதல் நாள் வசூலை தாண்டுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் அதிக அளவிலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் நிச்சயம் இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sundar C s Aranmanai 4 Box Office Prediction is here

இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக சொதப்பி வந்த நிலையில், கடந்த வாரம் வெளியான ரத்னம் படமும் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வெற்றி பெறவில்லை. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் கில்லி திரைப்படம் மட்டும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

அரண்மனை 4 கதை: சுந்தர் சி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் இன்று வெளியானது. இதுவரை சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படங்களில் சுந்தர் சி நடித்திருந்தாலும் அவரைத் தாண்டி இன்னொரு ஹீரோவும் படத்தில் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்காத நிலையில் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ளார். தங்கை தமன்னா மற்றும் அவரது கணவர் சந்தோஷ் பிரதாப் மர்ம மரணத்தை அறியும் சுந்தர். சி அவர்களின் மரணத்திற்கான காரணம் தெரிய வர அதற்கு காரணமாக அமையும் பேயிடம் இருந்து தமன்னாவின் குழந்தையை காப்பாற்றுவது தான் இந்த படத்தின் கதை.

முதல் நாள் வசூல் கணிப்பு: அரண்மனை 4 திரைப்படம் முதல் காட்சியில் 20% பேர் மட்டுமே நிறைந்திருந்த நிலையில் படத்துக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களுக்காக மதியமே 40% பேர் படத்தை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இரவு ஷோ எல்லாம் 60 முதல் 80 சதவீதம் பேர் படத்தைப் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வசூலை அரண்மனை நான்கு திரைப்படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்தால் நிச்சயம் இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கின்றனர்.

கவினுக்கு முன்னதாக: தமிழ் சினிமாவை அடுத்த வாரம் கவின் நடித்து வெளியாக உள்ள ஸ்டார் திரைப்படம் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுக்கு முன்னதாக சுந்தர் சி அரண்மனை 4 படத்தின் மூலம் ரேஸ்ல நானும் இருக்கேன் எனக் கூறி கெத்துக்காட்டியிருக்கிறார் என ரசிகர்கள் மீம் போட ஆரம்பித்து விட்டனர். மே மாதத்தில் இருந்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் செழிப்பாக இருக்கும் என தெரிகிறது. அடுத்த மாதம் இந்தியன் 2 படம் வேறு ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X