50வது நாள் கொண்டாடும் அரண்மனை 4 டீம்.. படத்தை திரையரங்குகளில் பார்க்க குவியும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகில் பன்முகம் காட்டி வருபவர் சுந்தர் சி. தன்னுடைய மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பூவுடன் இணைந்து அவர் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் அரண்மனை 4 திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிப்படமாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் அரண்மனை 4 படம் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. படம் 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்துள்ளது.நேற்றைய தினம் இந்தப்டம் ஓடிடியிலும் வெளியாகி ஏராளமான பார்வைகளை பெற்று வருகிறது.

Sundar C Tamannaah Rashi Khanna tamil cinema

இயக்குநர் சுந்தர் சி: நடிகர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுந்தர் சி நடிப்பில் கடந்த மாதத்தில் ரிலீசான படம் அரண்மனை 4. இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் படத்தின் நாயகிகளாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா இருவரும் இணைந்திருந்தனர். மேலும் படத்தில் கோவை சரளா, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. தொடர்ந்து இந்த படம் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வர வைத்துள்ளது.

அரண்மனை 4 படம்: இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை இன்றைய தினம் படக்குழுவினர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். மக்கள் தந்துள்ள மாபெரும் வெற்றி என்று போஸ்டர் வெளியிட்டுள்ளனர். நேற்றைய தினம் படம் ஓடிடியில் வெளியிடப்பட்டு அதிலும் அதிகமான பார்வைகளை பெற்று வருகிறது. தொடர்ந்து அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 என அடுத்தடுத்த பாகங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் சுந்தர் சி. தன்னுடைய தயாரிப்பிலேயே இந்த படங்களை அவர் இயக்கியிருந்த நிலையில் அரண்மனை மற்றும் அரண்மனை 2 படங்கள் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வெற்றி படங்களாக அமைந்தன.

ஹீரோவாக நடித்த சுந்தர் சி: அரண்மனை 3 கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தை சுந்தர் சி இயக்கி தயாரித்துள்ளார். மேலும் அவரேரை ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருந்த நிலையில் அவரது தேதிகள் இல்லாததால் இந்த படத்தில் இருந்து அவர் விலகியிருந்தார். இதையடுத்து அடுத்த ஹீரோவை தேடாமல் தானே ஹீரோவாக களம் இறங்கினார் சுந்தர் சி. தற்போது இந்த படத்தில் அவரது லுக் மற்றும் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் அவர் பிரமோஷனையும் மேற்கொண்டு இருந்தார்.

50 நாள் கொண்டாட்டம்: படம் குறித்தும் தனது முந்தைய படங்களை குறித்தும் அவர் அதிகமான சுவாரசியங்களை பகிர்ந்திருந்தார். இதையடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்த நிலையில், தற்போது அதிரி புதிரி வெற்றி பெற்றுள்ளது. படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து 50 நாட்களையும் திரையரங்கில் தாண்டியுள்ளது. அடுத்ததாக தமன்னாவுடன் இணைந்து மீண்டும் ஹாரர் படத்தை சுந்தர்சி இயக்கவுள்ளார். இதனிடையே கலகலப்பு 3 படத்திலும் அவர் இணையவுள்ளதாக முன்னதாக அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X