என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல.. வச்சு செஞ்சிட்டாங்க மறுபடியுமா? ஸ்ரீரெட்டியை கலாய்த்த விஷால்!

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியானத் திரைப்படம் மதகஜராஜா. 12 பிறகு வெளியான இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடியால் ரசிகர்கள் படையெடுத்து இப்படத்தை வெற்றிப்படமாக்கி உள்ளனர். இப்படத்தின் வெற்றிவிழா நேற்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விஷால், கலகலப்பாக பேசினார்.

மதகஜராஜா திரைப்படம் 2012ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2013ம் ஆண்டு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து, பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து, 12 வருடங்களுக்கு பின் இத்திரைப்படம் கடந்த வாரம் தியேட்டரில் வெளியானது. இப்படத்தில், விஷால், சந்தானம், வரலட்சுமி,அஞ்சலி, மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார்.

madha gaja raja success meet vishal

காமெடிக்கதை: விஷால் தன்னுடைய 3 நண்பர்களான சந்தானம், சடோகோப்பன் ரமேஷ், நிதின் சத்யாவுடன் பள்ளி வாத்தியார் மகள் திருமணத்திற்கு செல்கின்றர். அப்போது, சந்தானம் தன் மனைவியை விவாகரத்து செய்யப்போவது தெரியவருகிறது. அதே போல, சடோகோப்பன் ரமேஷ், நிதின் சத்யா இருவருமே தொழில் அதிபரான சோனுசூட்டால் பாதிக்கப்பட்டதை தெரிந்துகொண்டு, தனது நண்பர்களுக்காக சோனு சூட்டை எதிர்க்க விஷால் கிளம்புகிறார். கடைசியில் விஷால் தன் நண்பர்களை பிரச்சனைகளிலிருந்து மீட்டாரா இல்லையா என்பது தான் மதகஜராஜா படத்தின் கதை.

நல்ல வரவேற்பு: படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி இருந்தாலும், பழைய படம் போல இல்லாமல் நல்ல நகைச்சுவை படமாக இருந்ததாலும் ,சந்தானத்தின் காமெடி தற்போது வொர்க் அவுட் ஆகி இருப்பதாகவும், சந்தானத்தின் காமெடியைப் பார்த்து சிரித்து சிரித்தே வயிறு வலி வந்துவிட்டதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படம் முதல் நாளில் இருந்தே மக்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

madha gaja raja success meet vishal

மறுபடியுமா: இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், விஷால், சுந்தர் சி, விஜய் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய விஷால்,விஷால், சுந்தர் சி, விஜய் ஆண்டனியை பாராட்டும் விதமாக 3 டிராகன்களின் படங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த விஷால், ஏற்கனவே அனகோண்டானு சொல்லி என்னை வச்சு செஞ்சுட்டாங்க, நீங்க இப்ப இதைப் போட்டு திரும்பவும் ஞாபகப்படுத்துறீங்க என்றார். அப்போது தொகுப்பாளி சார் இது அனகோண்டா இல்ல சார், இது டிராகன் என்றார். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, ஓ இது டிராகனா. நீங்க டிராகன்னு போட்ருந்தா பரவால்ல.. பாம்பைப் போட்டுருக்கீங்க, என்னையும் பாம்பா ஆக்கிருக்கீங்களே என்று கலாய்த்தார்.

விஷால்,எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படத்தில் நல்ல வேளை அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல என்று ஒரு வசனம் வரும் இது இரட்டை அர்த்த வசனம் என சொல்லப்பட்ட நிலையில், படம் பார்த்த பிறகு தான் அது படத்தில் வரும் பீரங்கியை சொல்கிறார் என தெரிந்தது. ஆனால், அதற்குள் நடிகை ஸ்ரீ ரெட்டி, விஷாலை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதைத்தான் தற்போது மதகஜராஜா மேடையில் விஷால் சொல்லி கலாய்த்து உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X