Mookuthi amman 2: விரைவில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சூட்டிங்.. பட்ஜெட் இத்தனை கோடியா?

சென்னை: ஆர்ஜே, கிரிக்கெட் வர்ணனையாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்திறமையுடன் கோலிவுட்டில் வலம் வரும் ஆர்ஜே பாலாஜி தற்போது சூர்யா நடிப்பில் சூர்யா 45 படத்தை உருவாக்கி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இதன் அப்டேட்டை வேல்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

nayanthara sundar c mookuthi amman 2 movie

டைரக்டர் ஆர்ஜே பாலாஜி: ஆர்ஜேவாக தன்னுடைய பயணத்தை துவங்கியவர் ஆர் ஜே பாலாஜி. தொடர்ந்து சினிமாவில் நடிக்க கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பு, இயக்கம் என பன்முக திறமையுடன் கோலிவுட்டில் வலம் வரும் ஆர்ஜே பாலாஜி கடந்த 2020ம் ஆண்டில் என் ஜே சரவணனுடன் இணைந்து இயக்கிய படம் மூக்குத்தி அம்மன் படம். ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவான இந்த படம் ஓடிடியில் வெளியான நிலையிலும் மிகப்பெரிய வரவேற்பை குவித்தது. கடவுள் நம்பிக்கையை வைத்து நாட்டில் நடத்தப்படும் விஷயங்களை இந்த படம் பேசியிருந்த நிலையில் அம்மனாக நடித்திருந்த நயன்தாராவிற்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

மூக்குத்தி அம்மன் படம்: ஆர்ஜே பாலாஜி இந்த படத்தின் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் ஊர்வசி உள்ளிட்டவர்கள் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்த நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது. ஆர்ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தாமதமாகி வரும் சூழலில் நயன்தாரா சரியான கால்சீட்டை கொடுக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்த ஆண்டிலேயே சூட்டிங்: இந்நிலையில் இந்த படத்திற்காக காத்திருந்த சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டிலேயே படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல் பாகம் எளிமையான ஒரு இளைஞன், அம்மனை பார்க்க நேரிடுகையில் அவர்களுக்கிடையிலான நிகழ்வுகள் கதைக்களமாக கொள்ளப்பட்ட நிலையில் மிகவும் எளிமையாகவே இந்த படத்தை உருவாக்கியிருந்தார் ஆர்ஜே பாலாஜி.

பிரம்மாண்டமாக உருவாகும் படம்: இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை சுந்தர் சி, அரண்மனை படங்களின் பாணியில் பிரம்மாண்டமாக உருவாக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. சமூக அவலங்களை ஆர்ஜே பாலாஜி முதல் பாகத்தில் காட்சிப் படுத்தியிருந்த நிலையில் சுந்தர் சியின் உருவாக்கம் குறித்து ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X