தயவு செய்து இந்த தப்பை பண்ணாதீங்க.. நடிகைகளுக்கு அட்வைஸ் கொடுத்த சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் ராதா!
சென்னை: சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா, நான் செய்த தப்பை தயவு செய்து எந்த நடிகைகளும் செய்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி நடிப்பில் வெளியான நகைச்சவை திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் படத்தின் நடிகை ராதா.

சுந்தரா டிராவல்ஸ்: நகைச்சுவை திரைப்படமான சுந்தரா ட்ராவல்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கணிசமான வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பின், இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாத காரணத்தினால் சில படங்களில் மட்டுமே நடித்து இருந்த இடம் தெரியாமல் போனார்.
நடிகை ராதா: இதையடுத்து, திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார் ராதா,கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இதையடுத்து, ராதாவிற்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வரும் வசந்த ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இரண்டாம் திருமணம்: இதன்பிறகு வசந்த ராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்த ராஜாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதெல்லாம் தற்பொழுது ஓய்ந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராதா.
என் லட்சியம்:அண்மையில் பேட்டி ஒன்றில் என்னுடைய இளம் வயதில் நான் நிறைய தவறுகளை செய்து விட்டேன். சிறுவயதில் இருந்தே படத்தில் நடிப்பது தான் என் லட்சியமாக இருந்தது. ஆனால், திருமணத்திற்கு பிறகு வீடு குடும்பம் என்று ஐக்கியமாகி விட்டேன். இது நான் செய்த மிகப்பெரிய தவறு. என்னுடைய கேரியரை தொலைத்துவிட்டு திருமணத்தை செய்து கொண்டேன். இது போல் நான் செய்திருக்கக் கூடாது.
நடிகைகளுக்கு அட்வைஸ்: என்னுடைய வேலை, என்னை புரிந்து கொண்ட ஒருவரை நான் தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டு இருக்க வேண்டும். உங்களை புரிந்து கொண்ட ஒருவர் வாழ்க்கை துணையாக அமையவில்லை என்றால், நீங்கள் தனியாகவே இருந்து விடுங்கள். என் வாழ்க்கையில் நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இந்த தவறை யாரும் தயவு செய்துவிடாதீர்கள். ஒரு நடிகையாக இன்றைய இளம் நடிகைகளுக்கு நான் சொல்லும் அட்வைஸ் இதுதான் என்றார்.
60


Click it and Unblock the Notifications











