'சுந்தரே கெளடா' ஆவாரா 'சுந்தரபாண்டியன்'?!
சென்னை: சசிக்குமாரின் படம் எதையும் விடாமல் அத்தனையையும் ரீமேக் செய்து வரும் கன்னட திரையுலகம் லேட்டஸ்டாக வந்த சுந்தபாண்டியனையும் ரீமேக் செய்யப் போகிறதாம்.

அன்று முதல் இன்று வரை ரீமேக்தான்!
தமிழில் ஹிட் ஆகும் படங்களை சட்டுப்புட்டென்று ரீமேக் செய்வது கன்னடத்திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் பழக்கமாகும்.

'ரீமேக்' ரவிச்சந்திரன்
கிட்டத்தட்ட தமிழில் வெளியான அத்தனை ஹிட் படங்களையும் ரீமேக் செய்து விட்டார் கன்னடத்து ரவிச்சந்திரன் என்று சொல்லலாம். அவர் நடித்த படங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே ரீமேக்தான், குறிப்பாக தமிழில் சூப்பர் ஹிட் அடித்தவையாகவே இருக்கும்.

சுப்பிரமணியபுரம் - பிரேம் அட்டா
இந்த வரிசையில் தற்போது சசிக்குமாரின் படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துள்னர். சுப்பிரமணியபுரம் படத்தை பிரேம் அட்டா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் பிரேம் நடித்துள்ளார்.

நாடோடிகள் -போராளி
அதேபோல நாடோடிகள், போராளி ஆகிய படங்களையும் கூட ரீமேக் செய்து விட்டனர்.

அடுத்து சுந்தரபாண்டியன்
அடுத்து சுந்தரபாண்டியன் படத்தையும் ரீமேக் செய்யப் போகிறார்களாம். இந்தப் படம் லேட்டஸ்டாக வந்து ஹிட்டடித்த சசிக்குமார் படம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தயாரிப்பவர் மஞ்சு.. ஹீரோ யாஷ்
இந்தப் படத்தை தயாரிப்பாளர் கே. பஞ்சு தயாரிக்கவுள்ளார். இவர்தான் சுந்தரபாண்டியன் படத்தை கர்நாடகத்தில் விநியோகித்தவர் ஆவார். யாஷ் ஹீரோவாக நடிப்பார் என்று தெரிகிறது.

சமுத்திரக்கனி இயக்குவாரா?
இந்தப் படத்தை யார் இயக்கப் போவது என்று தெரியவில்லை. ஆனால் சசிக்குமாரின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான சமுத்திரக்கனி இயக்கக் கூடும் என்று பேச்சு அடிபடுகிறது.

அப்படீன்னா ஹீரோயின் யாரு?
சுந்தரபாண்டியன் படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருந்தார். கன்னடத்திலும் இவரே நடிப்பாரா அல்லது வேறு யாராவது கன்னடத்து பைங்கிளி நடிப்பாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











