twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    10 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தரபாண்டியன்..விஜய் சேதுபதிக்கு திருப்புமுனை படம்

    |

    விஜய் சேதுபதியை முக்கிய ரோலில் அடையாளம் காட்டிய படம் சுந்தரப்பாண்டியன் இந்தப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

    சசிகுமார் கதாநாயகனாகவும், சூரி அவரது நண்பராகவும் நடித்த முக்கோண காதல் கதை. ஆனால் உடனிருந்தே கொல்ல முயலும் துரோகியாக விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

    ஒரு வித்தியாசமான கதைக்கருவை திரைப்படமாக்கி வெற்றிக்கண்டிருப்பார் இயக்குநர் எஸ்.ஆர்.பாண்டியன்.

    நான் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லித்தான் ஆகணும்: சிம்பு ஏன் இப்படி சொன்னார்ன்னு தெரியுமா? நான் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லித்தான் ஆகணும்: சிம்பு ஏன் இப்படி சொன்னார்ன்னு தெரியுமா?

    காமெடி கதைகளில் வெற்றிப்பெற்ற இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்

    காமெடி கதைகளில் வெற்றிப்பெற்ற இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்

    தமிழ் திரையுலகில் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம், அறிமுகமாகனவர் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன். இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என வெகு சில படங்கள் மூலம் ஒரு தனித்த, சிறப்பான கதை சொல்லியாக ஒரு அருமையான கமர்ஷியல் இயக்குநராக அனைவராலும் பாரட்டு பெற்று வருகிறார். அடுத்ததாக ஜீ5 தளத்திற்காக 'கொலைகார கைரேகைகள்' எனும் வெப் தொடரையும் இயக்கி வருகிறார். சமீபத்தில் சுந்தர பாண்டியன் படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தமிழ் நாடு அரசின் விருதையும் வென்றுள்ளார். படத்துடன் சேர்த்து இவரும் திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை விஜய் சேதுபதி பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

    சசிகுமாரின் சுந்தரப்பாண்டியன்

    சசிகுமாரின் சுந்தரப்பாண்டியன்

    சசிகுமார் கிராம சப்ஜெக்டில் சரியாக பொருந்தும் நடிகர். சசிகுமார் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அடிக்கும் லூட்டியாக படம் ஆரம்பிக்கும். சசிகுமார் எந்த பெண்ணையும் பார்க்க மாட்டார். உடனிருக்கும் நண்பர்கள் பார்ப்பார்கள். நண்பருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சசிகுமார் தீர்த்து வைப்பார்.

    சசிகுமார் செய்து வைக்கும் வினோத பஞ்சாயத்து

    சசிகுமார் செய்து வைக்கும் வினோத பஞ்சாயத்து

    இந்த நிலையில் தான் சசிகுமாரிடம் ஒரு விநோத பஞ்சாயத்து வரும். தான் தினமும் பஸ்ஸில் பின்பற்றும் பெண்ணை இன்னொருவரும் போட்டி போட்டு தொல்லை கொடுக்கிறார் என பஞ்சாயத்து வரும். பஞ்சாயத்து செய்யும் சசிகுமாருக்கு அந்தப்பெண்- (லட்சுமி மேனன்) ணை பார்த்ததும் திக்கென்று இருக்கும். அவர் பிளஸ் டூ படிக்கும்போது பின்னால் சுற்றித்திரிந்து திட்டு வாங்கி விலகி ஓடிவந்த பெண். சரி நண்பராவது காதலிக்கட்டும் என்று உதவுவார். எதிர்ப்பக்கம் தொல்லை தரும் நபரை ஒரு மாதம் நீங்க லவ் பண்ணுங்க முடியலன்னா விட்டு விலகிடணும் என்று ஒப்பந்தம் போடுவார்.

    பஞ்சாயத்து தலைவரே காதலில் விழும் திருப்பம்

    பஞ்சாயத்து தலைவரே காதலில் விழும் திருப்பம்

    அதன் படி அந்த நபர் ஒருமாதம் முயற்சிப்பார். அந்த ஒரு மாதமும் இவர்கள் யாரும் பஸ்சில் போக மாட்டார்கள். ஒருமாதம் முயன்று அந்த நபருக்கு முடியாமல் போக சசிகுமார் தன் நண்பரான கல்லூரி மாணவரை அவரை லவ்வ தொடர சொல்வார், இதற்கிடையே தன்னை வைத்து சசிகுமார் இரண்டு பேரிடம் ஒப்பந்தம் போட பஞ்சாயாத்து செய்தது நாயகி லட்சுமி மேனனுக்கு தெரிய அவருக்கு கோபம் வருகிறது. இதற்கிடையே சசிகுமார் மீது அவருக்கு காதல் ஏற்பட சசிகுமாரும் அவரும் காதலிக்க தன் நண்பரை ஒதுங்கச் சொல்வார். சசிகுமாரை மீற முடியாமல் அவரும் ஒதுங்கிக்கொள்வார்.

    வீண் கொலைப்பழியில் சிக்கும் சசிகுமார்

    வீண் கொலைப்பழியில் சிக்கும் சசிகுமார்

    இதற்கிடையே முதல் நபர் மீண்டும் குறுக்கிட பஸ்சில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கீழே தள்ளப்பட்டு விபத்தில் இறக்க சசிகுமார் மீது பழி வந்து கைது செய்யப்படுவார். இந்த இடத்தில் தான் சசிகுமாரின் நண்பர் விஜய் சேதுபதி சசிகுமார் மீது கோபமாகி அவரை கொல்ல துடிப்பார். இதில் லட்சுமி மேனனை விரும்பி சசிகுமாரால் ஒதுங்கிய சசிகுமாரின் நண்பரும் சேர்ந்துக்கொள்வார். இப்படியே பல திருப்பங்களுடன் செல்லும் கதையில் கடைசியில் சசிகுமாரை கொல்ல முயல அவர்களை முறியடித்து லட்சுமி மேனனை திருமணம் செய்வார்.

    அசத்தும் வில்லன் விஜய் சேதுபதி

    அசத்தும் வில்லன் விஜய் சேதுபதி

    படம் முழுவதும் காமெடி காட்சிகளுடன் நகரும். சூரியின் காமெடியும் பஸ்சில் அவர்கள் அடிக்கும் லூட்டியும், லட்சுமி மேனனை காதலிக்க சசிகுமார் எடுக்கும் முயற்சிகளும், திட்டு வாங்கி ஒதுங்கியிருந்தவர் மீண்டும் நண்பன் காதலுக்காக உதவ போய் லட்சுமி மேனனை பார்த்து பம்முவதும் தியேட்டரை கலகலக்க வைக்கும். விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கிகொடுத்த படம், நண்பன் துரோகியாக மாறி கொலை வெறியுடன் சசிகுமாரை கொல்ல முயலும் ரோல் நன்றாக நடித்திருப்பார். 10 ஆண்டுகளில் விஜய் சேதுபதியின் வளர்ச்சி பாலிவுட்டில் கால் பதிக்கும் அளவுக்கு சென்று விட்டது.

    English summary
    Sundarrapandyan is the movie that introduced Vijay Sethupathi in the lead role. It has been 10 years since the release of this film. A love triangle story is starring Sasikumar as the protagonist and Suri as his friend. But Vijay Sethupathi will have played the traitor who tries to kill Sasi Kumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X