சுந்தரபாண்டியன் வெற்றியால் இயக்குநருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு!
சசிகுமார் நடித்து தயாரித்த சுந்தரபாண்டியன் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரனுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
அடுத்து ரெட்ஜெயன்ட் மூவீசுக்காக படம் இயக்கவிருக்கிறார் பிரபாகரன்.
சுந்தரபாண்டியன் படத்தை சமீபத்தில் பார்த்த உதயநிதிக்கு, படமும் அதை எடுத்த விதமும் ரொம்பவே பிடித்துப்போக, அந்த யூனிட்டை அப்படியே ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.
"சுந்தரபாண்டியன் அருமையான படம். ஜாலியா ரசிச்சுப் பார்த்தேன். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்," என்று ட்விட்டரில் தெரிவி்த்திருந்த உதயநிதி, அடுத்த நாளே பிரபாகரனை அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார்.
ரெட்ஜெயன்ட் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குங்கள் என்று கூறி, மற்ற விவரங்களையும் பேசி முடித்தாராம்.
இந்தப் படத்தில் உதயநிதியே நாயகனாக நடிப்பாரா அல்லது வேறு ஹீரோ நடிப்பார்களா என்பதை ஓரிரு நாளில் அறிவிக்கவிருப்பதாக பிரபாகரன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












