For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "ஆத்தாடி அப்பத்தா.. என்னா இடி.. என்னா அடி"... உருகும் ரசிகர்கள்.. நெகிழும் வரலட்சுமி!

  |

  சென்னை: ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கு நடிச்சாலே ரசிகர்கள் யோசித்துத்தான் திரும்பிப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு அப்பத்தா ரசிகர்களை புரட்டி எடுத்திருக்கிறார் என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

  அப்படி ஒரு சுத்தமான நடிப்பால் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் ஒரு பாட்டி.. அவர்தான் பிஆர் வரலட்சுமி. சன் டிவியில் வெளியாகி ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

  அப்பத்தா கேரக்டரில் அதகளம் செய்கிறார். ஹீரோயினுக்கு அப்பத்தாவாக வரும் இவர் இப்போது தமிழ்நாடு குட்டிப் பெண்களுக்கும் பிடிச்ச பாசக்கார அப்பத்தாவாகி விட்டார்.

  போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !

  அப்பத்தா

  அப்பத்தா

  வீட்டில் அப்பளம் இல்லாமல் கூட சாப்பிடுவார்கள்.. ஆனால் இந்த இப்பத்தாவைப் பார்க்காமல் யாரும் சாப்பிடுவதில்லை. அந்த அளவுக்கு சுண்டி இழுத்திருக்கிறார் சுந்தரி அப்பத்தா. இப்பத்தான் வரலட்சுமி அப்பத்தா. ஆனால் ஒரு காலத்தில் இவர் பிசியான ஹீரோயின். எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை ஜோடி போட்டுள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

  முன்னாள் ஹீரோயின்

  முன்னாள் ஹீரோயின்

  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் வரை ஒரு ரவுண்டு அடித்த பிசி நடிகைதான் வரலட்சுமி.
  வாழையடி வாழை படத்தில் ஆரம்பித்தது இவரது திரையுலக வாழ்க்கை.. அப்படியே மெல்ல ரவுண்டு வர ஆரம்பித்தவர் பின்னாளில் எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஆந்திராவில் கிருஷ்ணா என பல முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்தார். முத்துராமனுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அவரது மகன் கார்த்திக்குடனும் நடித்துள்ளார்.

  கமலுக்கு ஜோடி

  கமலுக்கு ஜோடி

  அதேபோலத்தான் சிவாஜியுடன் நடித்துள்ள இவர் பிரபுவுடனும் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் சங்கர்லால் படத்தில் நடித்துள்ளார். கடைசியாக 2007ம் ஆண்டோடு இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. அவர் நடித்த கடைசி படம் என்றால் தமிழ்த் திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய நான் அவன் இல்லை படம்தான். அத்தோடு சரி. அதன் பிறகு சின்னத்திரைக்கு இடம் பெயர்ந்து விட்டார்.

  செல்ல அப்பத்தா

  செல்ல அப்பத்தா

  ராதிகாவின் தயாரிப்பில் உருவான செல்வி, அரசி, செல்லமே என வலம் வந்தவருக்கு இப்போது நடித்து வரும் காந்திமதி கதாபாத்திரம்தான் அதாங்க.. அப்பத்தா... பெரும் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. சுந்தரி சீரியலில்தான் வரலட்சுமியை பலரும் உற்று நோக்கி வருகின்றனர். ஹீரோயினை விட இந்த அப்பத்தாவுக்கு செம கிராக்கி.

  சுந்தரிக்கு மட்டுமல்ல

  சுந்தரிக்கு மட்டுமல்ல

  சொல்லுங்க எப்படி இப்படி கலக்கறீங்க என்று வரலட்சுமியிடம் கேட்டால், செட்டில் எல்லோருமே என் மீது மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர். அதை விட மேலாக நல்ல ஸ்கிரிப்ட். இதில் நான் நடிக்கவில்லை. அப்படியே ஒன்றிப் போய் விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். சுந்தரிக்கு மட்டுமல்ல.. இங்கு எல்லோருக்குமே நான் அப்பத்தாதான்" என்று சொல்லி சிரிக்கிறார் வரலட்சுமி.

  எங்களோடு வந்துருங்க

  எங்களோடு வந்துருங்க

  வரலட்சுமி வெளியில் எங்கு போனாலும் சுந்தரி வயதுப் பெண்கள் பாசத்தோடு அப்பத்தா என்று தான் அழைக்கிறார்களாம். எங்க வீட்டுக்கு வாங்களேன் என்று பலரும் பாசத்தோடு கூப்பிடுகிறார்களாம். பெண்களின் ஒட்டுமொத்த அன்பையும், ஆதரவையும் வாரிக் குவித்துள்ளார் வரலட்சுமி. இத்தனை காலம் சினிமாவில் நடித்து கிடைத்த புகழை விட இதை பெரும் புகழாக அவர் கருதுகிறாராம்.

  அடுத்து சினிமா கதாநாயகி | BIGG BOSS SHIVANI EXCLUSIVE INTERVIEW | FILMIBEAT TAMIL
  தலையில் 2 ஷொட்டு!

  தலையில் 2 ஷொட்டு!

  எவ குடியைக் கெடுக்கலாம்.. எவ புருஷனை வளைக்கலாம் என்று வளைத்து வளைத்து ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கும் வில்லிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு வித்தியாசமான அப்பத்தாவை புகழ் பெற வைத்த அந்த இயக்குநருக்கு தலையில் 2 ஷொட்டு வைத்து தாராளமாக பாராட்டலாம். நீங்க கலக்குங்க அப்பத்தா!

  English summary
  "Sundari Appatha" is viral among Tamil women after seeing the performance of Actress PR Varalakshmi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X