gabriella : புடவையிலேயே கிளாமர் காட்டும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா!

சென்னை: சன் டிவி சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை கேப்ரில்லா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் ஒரு செய்தி பரவிய பெரும் பேசு பொருளான நிலையில், இன்ஸ்டாகிராமில் புடவையில் அதீத கவர்ச்சி காட்டும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை கேப்ரில்லா. இந்த நிகழ்ச்சியில் தனியாக வந்து நகைச்சுவை செய்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளியான டிடி போல் பேசியும், சிரித்து காட்டியும் பலரின் மனதில் இடம் பிடித்தார்.

sundari serial gabriella

சுந்தரி சீரியல்: இதைத்தொடர்ந்து, கேப்ரில்லா, நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர். சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'சுந்தரி' சீரியலில் லீட் ரோலில் நடித்து ரசிகர்களின் மனமில் இடம் பிடித்தார். அந்த சீரியல் அண்மையில் நிறைவடைந்தத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் புடவையில், அதீத கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

விவாகரத்து வதந்தி: அண்மையில் நடிகை கேப்ரியல்லா தன் கணவரை பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது. அவரது கணவருக்கு கேப்ரில்லா, சீரியலில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும் இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும், சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் இணையத்தில், பரவியது. இதைத்தொடர்ந்து, கேப்ரில்லா, தனது கணவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து, தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருந்தார்.

மேலும், நடிகை கேப்ரில்லா செல்லாஸ், சில மாதங்களுக்கு முன்பு சொந்தமாக நடிப்பு பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்கியிருந்தார். அதில் தன்னை போல நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வரும் பலருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X