இதெல்லாம் நியாயமே இல்ல.. கணவருடன் இருக்கிறேன்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சீரியல் நடிகை!
சென்னை: சன் டிவி சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை கேப்ரில்லா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி பெரும் பேசுபொருளானது. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் கேப்ரில்லா.
நடிகை கேப்ரில்லா 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குழுவாக இல்லாமல் தனியாக வந்து நகைச்சுவை செய்து ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில், விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளியான டிடி போல் பேசியும், சிரித்து காட்டியும் பலரின் மனதில் இடம் பிடித்தார். அதன் தொலைக்காட்சியில் பெரிதாக தென்படாத கேப்ரில்லா, டிக் டாக்கில் வீடியோ போட்டு பெயர் எடுத்தார்.

சுந்தரி சீரியல்: இதைத்தொடர்ந்து, கேப்ரில்லா, நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' சீரியலில் லீட் ரோலில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
விவாகரத்தா: இந்நிலையில், நடிகை கேப்ரியல்லா தன் கணவரை பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அவரது கணவருக்கு கேப்ரில்லா, சீரியலில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவியது. சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் இணையத்தில், பரவியது. இந்நிலையில், கேப்ரில்லா தனது இன்ஸ்டாகிராமில் தனது கணவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
காதல் கணவர்: கேப்ரில்லா ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்த போது தான் கேமராமேனாக இருந்த சுருளியின் நட்பு கிடைத்துள்ளது. அதற்கு பிறகு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கேப்ரில்லாவின் கனவை நினைவாக்குவதற்கு பல வகையிலும் அவருடைய கணவர் துணையாக இருந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











