தடபுடலாக நடந்த 'சுந்தரி' சீரியல் நடிகையின் வளைகாப்பு.. வாழ்த்திய நடிகர்கள்!

சென்னை: 'சுந்தரி' சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த நடிகை கேப்ரில்லா, சீரியல் முடிந்த கையோடு, கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை கூறியிருந்தார். தற்போது அவருக்கு தடபுடலாக வளைகாப்பு நடந்துள்ளது. அதன் வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாக பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கேப்ரில்லா செல்லஸ் 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் டிடியை போல் நடித்து காட்டியும் பேசியும் பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்பு டிக் டாக்கில் அழகான கருத்துள்ள வீடியோக்களை போட்டு பெயர் எடுத்தார். சின்னத்திரையில் தலைகாட்டி வந்த கேப்ரில்லா, நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 போன்ற படங்களிலும் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார்.

Sundari serial gabriella sellus baby shower

சுந்தரி சீரியல்: இதையடுத்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த சீரியல் 2023ம் ஆண்டு முடிவடைந்தது. இதில், கிராமத்தில் பிறந்து வளரும் சுந்தரி, குடும்பத்தின் அழுத்தம் காரணாக, ஐஏஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்ற கனவை மறந்து திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால், கருப்பாக இருப்பதால், சுந்தரியை கைவிட்டுவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சுந்தரியின் வாழ்க்கையை வீணாக்குகிறான். ஒருகட்டத்தில், கணவரின் இரண்டாவது மனைவியின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு சுந்தரிக்கு வர அந்த குழந்தையை வளர்க்கிறாள்.

Sundari serial gabriella sellus baby shower

அழுத்தனமான கதை: சுந்தரி சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது. இதில், சுந்தரி தனது கனவை கடுமையாக போராடி அடைகிறாள். மேலும், இறந்துவிட்டதாக நினைத்த கணவரின் இரண்டாவது மனைவி உயிருடன் இருக்கிறாள். பின் கார்த்திக் தன் தவறுகளை உணர்ந்து, சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டு, இரண்டாவது மனைவியுடன் மீண்டும் இணைகிறார். சுந்தரியும் வெற்றியும் திருமணம் செய்துகொண்டதாக சுந்தரி சீரியல் இரண்டாம் பாகம் முடிவடைந்தது. இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான சீரியல் என்பதால், அனைவரும் இதில் நடித்த கேப்ரில்லாவை பாராட்டினார்கள்.

Sundari serial gabriella sellus baby shower

தடபுடலான வளைகாப்பு: சீரியல் முடிந்த கையோடு நடிகை கேப்ரில்லா, இன்ஸ்டாகிராமில், தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை அறிவித்து இருந்தார். கேப்ரில்லா தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக பரவிய வதந்திக்கும் இந்த நல்ல செய்தியின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து, நடிகை கேப்ரில்லாவிற்கு ஏழாம் மாத வளைகாப்பு தடபுடலாக நடந்துள்ளது. இந்த வளைகாப்பில் குடும்பத்தினர், நண்பர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டு அவருக்கு பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கேப்ரில்லா தனது கணவருடன் சேர்ந்து ஜாலியாக ஆட்டம்போட்டுள்ளார்.

Sundari serial gabriella sellus baby shower

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X