சுருங்க போகும் தோலிற்கு ஓராயிரம் விமர்சனம்.. ஜாக்கெட் அணியாமல் சுந்தரி சீரியல் நடிகை சொன்ன தத்துவம்!

சென்னை: சன் டிவியின் சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லா ஜாக்கெட் அணியாமல் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு போட்டுள்ள தத்துவ கேப்ஷன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மைம் கலைஞரான கேப்ரில்லா செல்லஸுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக ஏகப்பட்ட கம்பெனிகளில் ஏறி இறங்கியும் அவரது நிறத்தை காரணம் காட்டி அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

கடைசியாக நயன்தாராவின் ஐரா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய அவருக்கு சன் டிவியில் சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சுந்தரி கேப்ரில்லா

சுந்தரி கேப்ரில்லா

கேப்ரில்லா செல்லஸ் எனும் அவரது பெயரே மறக்கும் அளவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சுந்தரியாகவே மாறிவிட்டார் கேப்ரில்லா. வெள்ளைத் தோல் நடிகைகள் பல நாடகங்களிலும் படங்களிலும் லீடு ரோலில் நடித்து வரும் நிலையில், கருப்பும் கலர் தான் என சன் டிவி சீரியலில் சுந்தரியாக லீடு ரோலில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கேப்ரில்லா.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான மூப்பில்லா தமிழ் தாயே பாடலில் கேப்ரில்லா பாடகி அவதாரமும் எடுத்து தனது ஒட்டுமொத்த திறமையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தார். இந்நிலையில், தற்போது அவர் ஜாக்கெட் அணியாமல் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

ஜாக்கெட் அணியாமல்

ஜாக்கெட் அணியாமல்

சிரீயல், சினிமா என கலக்கி வரும் கேப்ரில்லா தற்போது ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலை மட்டும் கட்டிக் கொண்டு கருப்பு வெள்ளை போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, தமிழில் வித விதமாக பதிவிட்டுள்ள கேப்ஷன்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

எனது ஆடையை வைத்து தான்

எனது ஆடையை வைத்து தான்

ஜாக்கெட் அணியாமல் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு கேப்ஷனாக, ""எனது ஆடையை வைத்து தான் எனது குணத்தை நீ மதிப்பிடுவாய் என்றால் அத்தகைய தேர்வில் நான் தோற்றாலும் மகிழ்ச்சியே" என பதிவிட்டு தனது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

சுருங்க போகும் தோல்

சுருங்க போகும் தோல்

மேலும், இன்னொரு போஸ்ட்டில், "சுருங்க போகும் தோலிற்கு ஓராயிரம் விமர்சனம் , சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்" என செம போல்டாக தத்துவங்களை பதிவிட்டு வருகிறார் கேப்ரில்லா செல்லஸ். அவரது இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்களுக்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X