சுந்தரி சீரியல் நடிகை கணவரை பிரிந்துவிட்டாரா? கேப்ரில்லாவின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?

சென்னை: சோஷியல் மீடியாவில் வீடியோவை வெளியிட்டு வந்த கேப்ரில்லா, இன்று அடைந்திருக்கும் உயரம் மிக மிக பெரியது எனலாம். ஆனால் இந்த உயரத்தை தொட அவர் சந்தித்த கஷ்டங்களும், அவமானங்களும் ஏராளமானவை. தற்போது சுந்தரி சீரியலில் நடித்து வரும் இவர் தனதுகணவரை பிரிந்துவிட்டதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

நடிகை கேப்ரில்லா செல்லஸ் பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும், அழகுக்கு ஒரு குறையும் இல்லாதவர். அவரது முகத்தில் ஏதோ ஒரு கலை இருக்கு. 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி போல் சிரித்து காட்டி பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்பு டிக் டாக்கில் வீடியோ போட்டு பெயர் எடுத்தார்.

sundari serial gabriella divorce

சுந்தரி சீரியல்: சின்னத்திரையில் அவ்வப்போது நடித்து வந்த கேப்ரில்லா, நயன்தாரா நடித்த ஐரா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

sundari serial gabriella divorce

விவாகரத்தா: இந்நிலையில் நடிகை கேப்ரியல்லா தன் கணவரை பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அவருக்கு, கேப்ரில்லா, சீரியலில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், இதுதான் பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கேப்ரில்லா ஒரு பேட்டியில் நான் சீரியலில் நடிப்பது என் கணவருக்கு பிடிக்கவில்லை. ஆனால்,அம்மாவுக்கு பிடிக்கும் என்பதால், நான் அவரிடம் பேசி ஓகே வாங்கிவிட்டு நடிக்க வந்துவிட்டேன் என்றார். ஆனால், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாகவும், சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இதுகுறித்து கேப்ரியல்லா எந்த ஒரு இடத்திலும் அதிகாரப்பூர்வமான தகவலை கூறவில்லை. ஒருவேலை வழக்கம் போல பரவும் வதந்தியாகக்கூட இருக்கலாம்.

sundari serial gabriella divorce

காதல் கணவர்: நடிகை கேப்ரில்லா ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்த போது தான் கேமராமேனாக இருந்த சுருளியின் நட்பு கிடைத்துள்ளது. அதற்கு பிறகு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது
திருமணத்தில் முடிந்துள்ளது. கேப்ரில்லாவின் கனவை நினைவாக்குவதற்கு பல வகையிலும் அவருடைய கணவர் துணையாக இருந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கேப்ரெல்லாவிற்கு எவ்வளவோ பிரச்சனை ஏற்பட்ட போதும், அவருடைய கணவர் தான் உறுதுணையாக இருந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X