உன்னலாம் யாரு நடிகையா செலக்ட் பண்ணாங்க.. அவமானங்களால் துவண்டுபோகாத சுந்தரி கேப்ரில்லா!
சென்னை : உன்னலாம் யாரு நடிகையா செலக்ட் பண்ணாங்க என்று கேட்டு பலர் அவமானப்படுத்தியதாக சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் பேட்டியில் கூறியுள்ளார்.
டிக் டாக் செயலி மூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமான கேப்ரில்லா, சுந்தரி சீரியல் மூலம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறார்.
இந்த உயரத்தை தொட அவர் சந்தித்த கஷ்டங்களும், அவமானங்களும் ஏராளமானவை. அந்த வலிகளை தாண்டி இன்று இல்லத்தரசிகளுக்கு பிடித்த நடிகையாக இருக்கிறார்.

கேப்ரில்லா பேட்டி: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கேப்ரில்லா, சினிமாவில் நடிகைகளுக்கு நிறம் குறித்த விமர்சனம் இன்னும் இருக்க தான் செய்கிறது. என்னதான் டஸ்கி ஸ்கின் டோன் நடிகைகள் கடினமான உழைப்பால் மேலே வந்து பிரபலங்களாக மாறினாலும் அவர்களின் நிறமானது எல்லா நேரத்திலும் எதாவது ஒரு விஷயத்தில் விமர்சிக்கப்படுகிறது.
சரியான பதில் அடி: படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் ஒருவர் வந்து, உன்னலாம் யாரு நடிகையா செலக்ட் பண்ணாங்க என்று முகத்திற்கு நேராகவே கேட்டார். நான் அவரிடம் உங்களின் கனவு கன்னி யார் என்று கேட்டேன், அவர் சில்க் ஸ்மிதா என்றார். அவங்களா யார் செலக்ட் பண்ணி சினிமாவிக்குள் வந்தார்களோ அப்படித்தான் நானும் வந்தேன் என்று சரியான பதில் அடி கொடுத்தேன். யாராவது நம்மை பற்றி விமர்சித்தால் அவர்களை எதிர்த்து தைரியமாக கேள்வி கேளுங்கள்.

திமிர் பிடித்த பெண்: ஒரு பெண் பொது இடத்தில் தைரியமாக சத்தமாக பேசினால், அந்த பெண் திமிர் பிடித்த பெண், எப்படி பேசுது பார் என்பார்கள். அப்படி சொல்பவர்கள் யாரும் உங்கள் நலம் விரும்பிகள் கிடையாது, எப்போ நீங்க தப்பு செய்வீங்க என்று எதிர்பார்த்து குறை சொல்ல தயாராக இருக்கும் கூட்டம் அவர்களுக்காக எல்லாத்தையும் பொருத்துக்கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு நேரம் ஒதுக்கி அழுவேன்: என்னைப் பார்த்தால் போல்டான லேடி மாதிரி தெரியும். ஆனால் நான் அப்படி இல்லை. இவ்வளவு பேசுறேனே தவிர, அடுத்த நிமிடம் பிரச்னை என்றால் உட்கார்ந்து அழுவேன். அழுவதற்கு ஒரு நேரம் ஒதுக்கி, கண்ணாடியை பார்த்து அழுதவள் நான். ஏன் எதுவுமே நமக்கு சரியானது நமக்கு அமையவில்லை என்று அழுதுயிருக்கேன். நாம் மனம் உடைந்து போயிருக்கும் போது, நமக்கு பிடித்த ஒருவருக்கு போன் செய்து மனம்விட்டு பேசினால், பல பிரச்சனைகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். இதையாரும் செய்வது இல்லை என்று நடிகை கேப்ரில்லா அந்த பேட்டியில் கூறியுள்ளார்


Click it and Unblock the Notifications











