அம்மாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்.. அரிய புகைப்படங்களை வெளியிட்ட இளம் நடிகர்!

ஹைதராபாத் : ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான நட்பேதுணை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் நடிகர் சுந்தீப் கிஷான் பல நேரடி தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாநகரம் திரைப்படத்தில் முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட சுந்தீப் கிஷான் இப்பொழுது ஃபேண்டசி இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற திரைப்படத்தில் பல இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சிக்ஸ் பேக்குடன் சுந்தீப் கிஷான் இருக்கும் எக்கச்சக்கமான புகைப்படங்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலான நிலையில் இப்பொழுது தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு அரிய புகைப்படங்களை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள சுந்தீப் கிஷான்க்கு ரசிகர்களிடம் இருந்து பல்வேறு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

விரைவில் முன்னணி நடிகராக ஜொலிக்க இருக்கும் நடிகர் சுந்தீப் கிஷான் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பிரபலமான திரை பின்புலத்தை கொண்டுள்ள இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வரும் நிலையில் தெலுங்கில் விரைவில் வெளியாக இருக்கும் விவாஹ போஜனம் என்ற கலகலப்பான காமெடி திரைப்படத்தில் தயாரிப்பதோடு ஒரு சில காட்சிகளில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் அறிமுகமான

லோகேஷ் கனகராஜ் அறிமுகமான

ரொமான்டிக் ஹீரோவாக இருந்தாலும் சரி முரட்டுத்தனமான ஹீரோவாக இருந்தாலும் சரி அதில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வரும் நடிகர் சுந்தீப் கிஷான் விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிமுகமான மாநகரம் திரைப்படத்தில் முரட்டுத்தனமான இளைஞராக நடித்து நடிப்பில் அசத்தி இருப்பார்.

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இளம் பெண்களின் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் தனது அம்மாவின் பிறந்த நாளுக்கு சுந்தீப் கிஷான் செய்துள்ள சர்ப்ரைஸ் இணைய தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

வயது வாரியாக

வயது வாரியாக

அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய சுந்தீப் கிஷான் அதற்காக சிறுவயது முதல் அம்மாவுடன் எடுத்த பழைய புகைப்படங்களை ஒவ்வொன்றாக வயது வாரியாக பதிவிட்டு சிறுவயது முதல் இன்று வரை அம்மாவுடன் இணைந்து இருக்கும் அனைத்து படங்களையும் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருந்த நிலையில் இந்த அரிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவர இப்பொழுது இந்த அரியப் புகைப்படங்கள் செம வைரலாகி.

More from Filmibeat

Read more about: sundeep kishan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X