சுந்தீப் கிஷானின் கண்ணாடி ஓடிடியில் வெளியீடு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கண்ணாடி திரைப்படம் தற்போது OTT தளத்தில் வெளியாக உள்ளது.
சுந்தீப் கிஷான் நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் கண்ணாடி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருந்த நிலையில் தற்பொழுது தமிழில் வெளியாக உள்ளது.
உள்குத்து, திருடன் போலீஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியாகி பலரையும் கவர்ந்து வந்த நிலையில் தற்போது இந்த படம் அமேசான் ஆன்லைன் தளத்தில் வெளியாக உள்ளது.

ரொமான்டிக் திரில்லர்
புது இயக்குனர்களின் முயற்சியில் புதுப்புது கதைகளை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழில் திருடன் போலீஸ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் ராஜு தற்போது இயக்கியுள்ள ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் கண்ணாடி.

பூர்ணிமா பாக்யராஜ்
தெலுங்கு மற்றும் தமிழில் ஒருசேர உருவான இந்த திரைப்படம் சென்ற ஆண்டு தெலுங்கில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சுந்தீப் கிஷான் மற்றும் அன்யா சிங் லீட் ரோலில் நடிக்க பூர்ணிமா பாக்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் தமிழில் "கண்ணாடி"என்ற பெயரில் உருவாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்காலிகமாக திறக்கப்படாமல்
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே இந்த படம் தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் அதீத கொரானா நோய் தொற்று பரவலின் காரணமாக தியேட்டர்கள் முழுவதும் பொது முடக்கம் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் தற்காலிகமாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே ரிலீஸுக்கு தயாராக இருந்த பல படங்கள் தற்போது வெளியிட முடியாமல் தவித்து வருகிறது.

வித்தியாசமான கதை
தமிழில் பல படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது கண்ணாடி திரைப்படத்தையும் அமேசான் ஆன்லைன் தளத்தில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. திருடன் போலீஸ், உள்குத்து என தனது பாணியில் இயக்குனர் கார்த்திக் ராஜூ படங்களை இயக்கி வந்த நிலையில் முதல் முறையாக தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சேர தயாரான இந்தப் படம் இயக்குனரின் முந்தைய படங்களை விட வித்தியாசமாக இருக்கும் என இப் படக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பை பெற்றுள்ளது
இயக்குனர் கார்த்திக் ராஜூ கண்ணாடி திரைப்படத்தை தொடர்ந்து ரெஜினா கெஸன்ட்ரா நடித்துவரும் சூர்ப்பநகை என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். ரெஜினா நடிக்கும் இந்த படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்பொழுது கண்ணாடி திரைப்படம் OTTயில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

ரொமான்டிக் திரில்லர்
ஆக்சன், காதல் மற்றும் திரில்லர் என உருவாகியிருக்கும் கண்ணாடி திரைப்படம் இயக்குனர் கார்த்திக் ராஜூவின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமென சொல்லப்படும் நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வந்த நிலையில் தற்பொழுது வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











