கடவுளா வேணா மனுஷனாவே இருந்துக்கிறேன்.. சந்தீப், விஜய்சேதுபதியின் மிரட்டலில் வெளியான மைக்கேல் டீசர்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள மைக்கேல் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாள டிரைலரை துல்கர் சல்மான் வெளியிட, தமிழ் டிரைலரை நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தி உள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நிலையில், அவரையும் வாழ்த்தி உள்ளார் தனுஷ்.

தயாரிப்பாளர் லோகேஷ்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மைக்கேல் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தளபதி 67 படத்தின் அப்டேட் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் வெயிட் பண்ணி வரும் நிலையில், முன்னதாக மைக்கேல் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

டீசரை வெளியிட்ட தனுஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி, கெளதம் மேனன், திவ்யான்ஷா கெளசிக், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் மைக்கேல் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் தமிழ் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு படக்குழுவினரையும் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜையும் வாழ்த்தி உள்ளார்.

ரஞ்சித் ஜெயக்கொடி
விஜய்சேதுபதியை வைத்து புரியாத புதிர் படத்தை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ஹரிஷ் கல்யாணின் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷன் மற்றும் மாஸ்டர், விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதியை வைத்து வெறித்தனமாக ஒரு கேங்ஸ்டர் படத்தை இயக்கி உள்ளார்.

யாரு மைக்கேல்
இந்த படத்தில் சந்தீப் கிஷன் தான் மைக்கேல் எனும் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கெளதம் மேனன், விஜய்சேதுபதி என ஏகப்பட்ட வில்லன்களை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தான் கதையாக இருக்கும் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

மீண்டும் வில்லன்
விக்ரம் வேதா படத்தில் நெகட்டிவ் ஷேட் பண்ண ஆரம்பித்த விஜய்சேதுபதி, ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் என தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்து வரும் விஜய்சேதுபதி மைக்கேல் படத்திலும் வித்தியாச்மான தோற்றத்தில் வில்லனாக தெறிக்கவிடுகிறார்.

லிப் லாக்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே லிப் லாக் காட்சியை வெளியிட்டுத் தான் வியாபாரத்தை ஆரம்பித்தனர். இந்த டீசரிலும் ஏகப்பட்ட ரொமான்டிக் காட்சிகளும், கடைசியாக லிப் லாக் காட்சியுடனும் டீசர் நிறைவடைகிறது. மன்னித்தால் கடவுள் ஆகலாம் மைக்கேல் என ஒரு குரல் ஒலிக்க, நான் மனுஷனாவே இருக்கிறேன் என தனது மாஸ்டரையே போட்டுத் தள்ளுகிறான் மைக்கேல் என்பதோடு இந்த டீசர் முடிவடைகிறது.


Click it and Unblock the Notifications











