நடிகர் சந்தீப் செய்த 'வேலை'... ஓட்டல் அறையில் இருந்து வெளியேறிய நடிகை ஆத்மிகா!

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

ஓட்டலில் பேய்...அலறியடித்து வெளியேறிய நடிகை ஆத்மிகா!- வீடியோ

சென்னை: நரகாசூரன் படப்பிடிப்பின்போது ஓட்டல் அறையில் பேய் இருப்பதாக நினைத்து நடிகை ஆத்மிகா அலறியதாக நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம் நரகாசூரன். சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமான இதில், அரவிந்த் சுவாமி, ஷ்ரேயா சரன், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Sundeep teases Actress Athmika

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சந்தீப் கிஷன், படப்பிடிப்பின் போது நடிகை ஆத்மிகாவை கிண்டல் செய்துகொண்டே இருந்ததாக அவர் கூறினார்.

விழாவில் அவர் பேசியதாவது, "கதையே கேட்காமல் நான் ஒத்துக்கொண்ட முதல்படம் நரகாசூரன். நான் பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு, பின்னர் நடிகனாக போகிறேன் எனக் கூறி பாதியில் நின்றபோது, படிக்காமல் இருக்கதான் நான் இந்த காரணத்தை கூறுகிறேன் என என் பெற்றோர் நினைத்தனர்.

Sundeep teases Actress Athmika

ஆனால் நான் தற்போது நடிகனாக இருப்பதை நினைத்து அவர்கள் பெருமைபடுகின்றனர். நல்லவேளை அன்று நீ எனது பேச்சை கேட்கவில்லை என்று என் தந்தை கூறினார்.

கார்த்திக் நரேன் ஒரு பர்பெக்ட்டான இயக்குனர். மிக தெளிவாக ஸ்கிரிப்ட் செய்து எங்களிடம் வேலை வாங்கினார். படப்பிடிப்பின் போது நானும் இந்திரஜித்தும் சேர்ந்து நடிகை ஆத்மிகாவை கேலி செய்து கொண்டே இருந்தோம்.

Sundeep teases Actress Athmika

ஒரு நாள் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பேய் இருப்பதாக கிளப்பிவிட்டோம். அதை நம்பி பயந்துபோன அவர், ஓட்டல் ஊழியர்களை எல்லாம் வரவழைத்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார்.

படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது", இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X