Vijayakanth: குடித்துவிட்டு வடிவேலு-முரளி ரகளை.. தொலச்சுடுவேன்னு மிரட்டிய கேப்டன் விஜயகாந்த்!

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிகராக மட்டும் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லை. அரசியலிலும் காலடி எடுத்து வைத்தார். அங்கேயும் தான் இருந்தவரை அரசியல் தன்னை மைய்யபடுத்தி நகரும்படி பார்த்துக் கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் போனபின்னர்தான் கேப்டனால் ஆக்டிவாக இருக்க முடியவில்லை. கேப்டனின் அரசியல் வாழ்வு குறித்து பலருக்கும் தெரியும். ஆனால் அவரது சினிமா வாழ்க்கை குறித்து பலருக்கும் தெரியாது. நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களாகவே சொல்லும்போதுதான் பல விஷயங்கள் தெரியவருகின்றது. அப்படியான ஒரு விஷயம் தான் இப்போது தெரியவந்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தலைவராகவும் அங்கம் வகித்தார். எதோ பெயருக்கு தலைவராக இல்லாமல், நடிகர் சங்கக் கடனை முழுவதுமாக அடைத்து, நடிகர் சங்கத்தினை கடன் இல்லாத நிலைக்கு உயர்த்தினார். அதேபோல் பொட்டலம் சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்த சினிமா உலகில் அனைவருக்கும் இலை போட்டு விருந்து போட வைத்தவர் இவர்தான். இதற்காக இவரது சம்பளத்தில் இருந்து கணிசமான தொகையை விட்டுக்கொடுக்கவும் செய்தார்.

vadivelu murali vijayakanth

இதுமட்டும் இல்லாமல் தனது அலுவலகத்தில் எப்போதும் சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்தவர் விஜயகாந்த். தான் நடிகராக இருந்தபோதே, பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இவரால் பயனடைந்த யாரேனும் ஒருவராவது, ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

vadivelu murali vijayakanth

தைரியம்: விஜயகாந்த் தைரியத்திற்கும் தொழில் பக்திக்கும் பெயர்போனவர். சினிமாகாரர்கள் மட்டும் அல்ல, வேறு யாராக இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பேசவேண்டும். வாய்தவறி வார்த்தைவிட்டால், அவர்களை சினிமாக்காட்சிகளை விடவும் ஆக்ரோசமாக அடித்து துவம்சம் செய்துவிடுவார். இப்படியான பல சுவாரஸ்யமான சம்பவங்களை பல திரைப்பிரபலங்கள் கூறியுள்ளனர்.

vadivelu murali vijayakanth

சுந்தரா டிராவல்ஸ்: அந்த வகையில் கடந்த 2002ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, வினுசக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான செம காமெடியான படம் சுந்தரா டிராவல்ஸ். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தினை இப்போது தொலைகாட்சியில் ஒளிபரப்பினாலும் படத்தினை முழுவதுமாக பார்த்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கும் அளவிற்கான ரசிகர்களை இந்தப் படம் உருவாக்கி வைத்துள்ளது.

vadivelu murali vijayakanth

வடிவேலு - முரளி: இந்தப் படத்தினை இயக்குநர் தாஹா இயக்கினார். படத்தினை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் தங்கராஜ் தயாரித்தார். தற்போது தங்கராஜ் கூறிய விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது படப்பிடிப்பின்போது, முரளியும் வடிவேலும் குடித்துவிட்டு சரியாக படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் படத்தினை கைவிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த்தை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கேப்டன் விஜயகாந்த், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று, முரளி மற்றும் வடிவேலு என இருவரையும் கடுமையாக மிரட்டியுள்ளார். படத்தினை ஒழுங்காக நடித்துக் கொடுக்கவில்லை என்றால், தொலைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதன் பின்னர்தான், இருவரும் படத்தினை பிரச்னை செய்யாமல் முடித்துக் கொடுத்ததாக தயாரிப்பளார் தங்கராஜ் கூறியுள்ளர். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக உலா வருகின்றது.

vadivelu murali vijayakanth

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X