கேன்ஸ் திரைப்பட விழா: முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம் 'சன்பிளவர்'.. ராஜமவுலி வாழ்த்து!
கேன்ஸ்: 77ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் பல இந்திய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன. இதில், குறும்பட போட்டியில் முதல் பரிசை இந்திய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய 'சன்பிளவர்' என்ற குறும்படம் பரிசை வென்றது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்ததாக சினிமாத் துறையில் உலகப் புகழ் பெற்ற விழாவாக உள்ளது 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் 1946ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும், இவ்விழா நடைபெற்று வருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடம்பரமான ஃபேஷன் மற்றும் நேர்த்தியான ஆடைகளை உலகிற்கு காட்டும் ஒரு இடமாக மாறியுள்ளது.

கேன்ஸ் 2024: உலகளவில் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்றாக இருப்பதால் நடிகை, நடிகர்கள் மட்டும் அல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மே 15ந் தேதியில் தொடங்கிய இந்த விழா நேற்றோடு நிறைவடைந்தது.
சிறந்த குறும்படம்: இதில், சிறந்த குறும்படத்திற்கான லா சினிப்பிரிவில் இடம் பெற்ற இந்தியத் திரைப்படமான 'சன்பிளவர்ஸ்' முதல் பரிசை வென்றது. 16 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்டபத்தை மைசூரை சேர்ந்த சித்தானந்த் எஸ்.நாயக் இயக்கி இருந்தார். புனேவை சேர்ந்த திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இக்குறும்படத்தை தயாரித்துத் இருந்தனர். திருடு போன சேவலை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதேபோல மீரட்டை சேர்ந்த மான்சி மகேஸ்வரி என்ற மாணவி இயக்கிய 'பன்னி ஹூட்' என்ற குறும்படம் மூன்றாம் பரிசை பெற்றது. கிராமிய கலைஞரான ஒரு பெண்ணின் வாழ்க்க யை மையமாக வைத்துத் இந்த படம் உருவாகி இருந்தது.
ராஜமௌலி வாழ்த்து: முதல் பரிசு பெற்ற 'சன்பிளவர்ஸ் ' படக்குழுவுக்கு இயக்குனர் ராஜமவுலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்துத் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய திறமை எல்லைத்தாண்டி பிரதிபலிக்கிறது. கேன்ஸ் 2024 இல் சிறந்த குறும்படத்திற்கான லா சினிப் விருதை சித்தானந்த் எஸ்.நாயக்கின் 'சன்பிளவர்ஸ்ர் ' வென்றுள்ளது என்பதை கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி. இளைஞர்களுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











