கிரிக்கெட் வீரருடன் தர்பார் பட வில்லன் மகள் லிவிங் டூகெதர்.. சொகுசு வீடு எடுத்து ஒரே கும்மாளமாம்!

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரரும் நடிகையும் சொகுசு வீடு ஒன்றை வாடகை எடுத்து லிவிங் டூகெதர் வாழ்க்கையை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட் நடிகரும் தர்பார் படத்தின் வில்லனுமான சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா ஷெட்டி பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் கடந்த 3 ஆண்டுகளாக இந்த இளம் வாரிசு நடிகையை காதலித்து வருகிறார்.

தர்பார் வில்லன்

தர்பார் வில்லன்

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்திருப்பார் சுனில் ஷெட்டி. மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் அரபிக் கடலின் சிங்கம் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

சுனில் ஷெட்டி மகள்

சுனில் ஷெட்டி மகள்

கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா ஷெட்டி. தொடர்ந்து முபாரகான், நவாப்ஸாதே, மோட்டிசூர் சக்காசூர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பிரபல கிரிக்கெட் வீரரை காதலித்து வருகிறார்.

3 ஆண்டுகளாக காதல்

3 ஆண்டுகளாக காதல்

கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்குமான காதல் கதைகள் பல காலமாகவே அரங்கேறி வருகிறது. அந்த வகையில், லேட்டஸ்ட் காதல் ஜோடிகளாக கே.எல். ராகுல் மற்றும் ஆதியா ஷெட்டி அந்த பட்டியலில் இணைந்துள்ளனர். இருவரும் பல முறை டேட்டிங் சென்ற போட்டோக்கள் எல்லாம் பாலிவுட்டில் கசிந்து டிரெண்டாகின.

லிவிங் டூகெதர்

லிவிங் டூகெதர்

இந்நிலையில், மும்பையில் 4BHK சொகுசு வீடு ஒன்றை வாடகை எடுத்து கே.எல். ராகுல் மற்றும் நடிகை ஆதியா ஷெட்டி இருவரும் லிவிங் டூகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்தில் கிரிக்கெட் வீரரின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த சொகுசு வீட்டில் சிறப்பான பர்த்டே பார்ட்டியும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

10 லட்சம் வாடகை

10 லட்சம் வாடகை

தனது காதலியுடன் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் சொகுசாக லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ பிடித்திருக்கும் அந்த 4BHK வீட்டின் ஒரு மாத வாடகை மட்டும் 10 லட்சம் ரூபாய் என்கின்றனர். கடற்கரையை நோக்கி பார்த்தது போல பாந்த்ராவில் உள்ள கார்ட்டர் சாலையில் அந்த வீடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுக்கு பிரச்சனை இல்லை

எங்களுக்கு பிரச்சனை இல்லை

திருமணம் ஆகாமல் மகள் இப்படி கிரிக்கெட் வீரருடன் வாழ்ந்து வருகிறாரே என்கிற கேள்வியை ஆன்லைன் போர்ட்டல் ஒன்று சுனில் ஷெட்டியிடம் எழுப்ப, எனக்கும் என் மனைவி மனாவுக்கும் இதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. மகள் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் என்றும், அவர்கள் திருமணத்திற்கு எப்போது தயார் ஆகின்றனரோ அப்போ திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X