குறிச்சாச்சு தேதி.. தொழிலதிபருடன் பிரபல பின்னணி பாடகியின் 2 வது திருமணம் எப்போது?

By

ஐதராபாத்: பிரபல பாடகியின் இரண்டாவது திருமணம் ஜனவரி 9 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

தமிழ், தெலுங்கில் ஏராளமானப் பாடல்களை பாடியிருப்பவர் சுனிதா. இளையராஜா இசையில் தமிழ், தெலுங்கில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் சுனிதா.

விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெறும், காதல் சொல்வது உட்பட பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.

மகனும் மகளும்

மகனும் மகளும்

டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கும் இவர், சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார். இவர், பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். 19 வயதிலேயே திருமணம் செய்துகொண்ட சுனிதாவுக்கு மகனும் மகளும் உள்ளனர். பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டார்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

இவர் மகள் ஷ்ரேயாவும் பாடகியாக இருக்கிறார். பாடகி சுனிதா பற்றி அடிக்கடி வதந்தி வருவது தெலுங்கு சினிமாவில் வழக்கம். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று அடிக்கடி செய்திகள் வந்துபோகும். இதுபோன்று வந்த வதந்திக்கு உருக்கமான பதிவு ஒன்றை அவர் சில மாதங்களுக்கு முன் போஸ்ட் செய்து மறுத்திருந்தார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இதற்கிடையே, அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மீண்டும் செய்திகள் வெளியானது. முதலில் மறுத்த அவர், பின்னர் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை வெளியிட்டு உண்மைதான் என்று கூறியிருந்தார். தொழிலதிபர் ராம் வீரபனேனி என்பவரை அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

அற்புதமான நண்பர்

அற்புதமான நண்பர்

இதுபற்றி அவர் கூறும்போது, என் வாழ்க்கையில் அற்புதமான நண்பராகவும் சிறந்த பார்ட்னராகவும் ராம் வீரபனேனி நுழைந்திருக்கிறார். விரைவில் திருமண பந்தத்துக்குள் இணைய இருக்கிறோம். என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார். இவர்கள் டிசம்பர் 27 ஆம் தேதி ஐதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள இருந்தனர்.

நெருங்கிய சொந்தம்

நெருங்கிய சொந்தம்

இந்நிலையில் இவர்கள் திருமணம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போனது. அதன்படிதிருமணத் தேதி இப்போது முடிவாகி இருக்கிறது. ஜனவரி 9 ஆம் தேதி திருமணம் ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களை அழைக்க முடிவு செய்துள்ளனர்.

Recommended Video

ACTING IDEA இப்போதைக்கு இல்ல | KAADHAL SANDHYA EXCLUSIVE | FILMIBEAT TAMIL
சாட்டிலைட் உரிமை

சாட்டிலைட் உரிமை

தொழிலதிபர் ராம், தெலுங்கு சினிமா உலகில் நன்கு அறிமுகமானவர். டிஜிட்டல் மீடியா நிறுவனம் ஒன்றின் தலைவரான அவர், தெலுங்கு படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பெற்று விற்பவர் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்கள் திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X