twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2வது திருமணத்துக்குப் பிறகு.. காதல் கணவருடன் புதிய போட்டோவை வெளியிட்ட பிரபல பாடகி!

    By
    |

    ஐதராபாத்: தனது காதல் கணவருடன் திருமணத்துக்குப் பிறகு எடுத்துக்கொண்ட புதிய போட்டோவை

    தமிழ், தெலுங்கில் ஏராளமானப் பாடல்களை பாடியிருப்பவர் சுனிதா. இளையராஜா இசையில் தெலுங்கில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் சுனிதா.

    78வது கோல்டன் குளோப் விருதுகள்: பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த படங்கள் என்னன்னு பாருங்க!78வது கோல்டன் குளோப் விருதுகள்: பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த படங்கள் என்னன்னு பாருங்க!

    விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெறும், காதல் சொல்வது உட்பட பல பாடல்கள் ஹிட்டாகி யுள்ளன.

    மகனும் மகளும்

    மகனும் மகளும்

    டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கும் இவர், சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார். இவர், பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். 19 வயதிலேயே திருமணம் செய்துகொண்ட சுனிதாவுக்கு மகனும் மகளும் உள்ளனர். பின்னர் கணவர் கிரணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர்.

    உருக்கமான பதிவு

    உருக்கமான பதிவு

    இவர் மகள் ஷ்ரேயாவும் பாடகியாக இருக்கிறார். பாடகி சுனிதா பற்றி அடிக்கடி வதந்தி வருவது தெலுங்கு சினிமாவில் வழக்கம். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று அடிக்கடி செய்திகள் வந்துபோகும். இதுபோன்று வந்த வதந்திக்கு உருக்கமான பதிவு ஒன்றை அவர் சில மாதங்களுக்கு முன் போஸ்ட் செய்து மறுத்திருந்தார்.

    தொழிலதிபர் ராம்

    தொழிலதிபர் ராம்

    இதற்கிடையே, அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மீண்டும் செய்திகள் வெளியானது. முதலில் மறுத்த அவர், பின்னர் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை வெளியிட்டு, உண்மைதான் என்று கூறியிருந்தார். தொழிலதிபர் ராம் வீரபனேனி என்பவரை அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்வதாக அறிவித்தார்.

    சிறந்த பார்ட்னர்

    சிறந்த பார்ட்னர்

    இதுபற்றி அவர் கூறும்போது, என் வாழ்க்கையில் அற்புதமான நண்பராகவும் சிறந்த பார்ட்னராகவும் ராம் வீரபனேனி நுழைந்திருக்கிறார். விரைவில் திருமண பந்தத்துக்குள் இணைய இருக்கிறோம். என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார்.
    இவர்கள் திருமணம் ஜனவரி 9 ஆம் தேதி ஐதராபாத் அருகிலுள்ள அம்மாபள்ளி, ஶ்ரீ சீதாராம சுவாமி கோயிலில் நடந்தது. பிரபல தெலுங்கு ஹீரோ நிதின் உட்பட பலர் குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்தினர். பாடகி சுனிதாவின் மகள், மகன் மற்றும் திரையுலகினரும் மணமக்களை வாழ்த்தினர்.

    டிஜிட்டல் மீடியா

    டிஜிட்டல் மீடியா

    தொழிலதிபர் ராம், தெலுங்கு சினிமா உலகில் நன்கு அறிமுகமானவர். டிஜிட்டல் மீடியா நிறுவனம் ஒன்றின் தலைவரான அவர், தெலுங்கு படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பெற்று விற்பவர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமான ராம் பல வருடங்களுக்கு முன்பே தனது மனைவியை விவாகரத்து செய்தவர்.

    காதல் கணவருடன்

    காதல் கணவருடன்

    இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு தனது காதல் கணவருடன் தான் எடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சுனிதா. இவர்கள் சமீபத்தில் புதிய வீட்டில் குடியேறியுள்ளனர். இந்தப் புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது. இவர்கள் இந்த மாதம் தேனிலவு செல்ல இருக்கின்றனர்.

    English summary
    singer Sunitha took it to social media to update the new photograph she took with her husband Ram.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X