கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த சன்னி லியோன்.. அட இதுவும் ஒருவகையில திருட்டுதாம்மா!

மற்றவரின் ஓவியத்தை காப்பியடித்து வரைந்து, ஏலம்விட்டதாக நடிகை சன்னி லியோன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மும்பை: நடிகை சன்னி லியோன் மீது கருத்துத் திருட்டு குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளது.

சன்னி லியோனை தெரியாத ஆண்களே இருக்க முடியாது. உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை அவர். ஆபாச பட நடிகையாக வாழ்க்கையை ஆரம்பித்து திரைப்பட நடிகையாக மாறி, பாலிவுட் முதல் கோலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கிறார்.

நடிகை என்பதையும் தாண்டி சன்னி லியோனுக்கு மற்றொரு முகமும் இருக்கிறது. ஏழை மக்களுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி, பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் அவர். தனது தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சி நடத்துவது சன்னியின் வழக்கம்.

சன்னியின் பொது சேவை

சன்னியின் பொது சேவை

அதுபோல் பொது சேவை செய்த சன்னி மீது திருட்டு பழி சுமத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வரைந்த ஓவியத்தின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் சன்னி. அதில், கேன்சர் நோயாளிகளுக்கு உதவுவதற்காக அந்த ஓவியத்தை ஏலம்விடப் போவதாக அறிவித்திருந்தார் அவர்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இதனை பார்த்த ஒருவர் பெரும் அதிர்ச்சியுடன், சன்னி தீட்டிய ஓவியம் தன்னுடையது என உரிமை கோரியுள்ளார். தனக்கு ஒரு கிரேடிட் கூட கொடுக்காமல், தனது ஓவியத்தை எப்படி பயன்படுத்தலாம் என சன்னியிடம் மல்லுக்கட்டியுள்ளார். பொது சேவைக்காகவே இருந்தாலும், மற்றவர்களுக்கு சொந்தமான பொருளை, அவர்களின் அனுமதி இல்லாமல் எப்படி பயன்படுத்தலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சன்னி லியோன் விளக்கம்

அதற்கு பதிலளித்துள்ள சன்னி லியோன், "என்னிடம் ஒரு புகைப்படத்தை கொடுத்து வரைய சொன்னார்கள். எனக்கு அந்த படம் பிடித்திருந்ததால், உடனடியாக வரைந்துவிட்டேன். இது என்னுடைய சொந்த கற்பனை என எப்போதாவது நான் சொன்னேனா? நல்ல விஷயத்துக்காக இது பயன்படுவதை நினைத்து நீங்கள் சந்தோஷம் தான் பட வேண்டும்", என கூறியுள்ளார்.

அறிவுசார் திருட்டு

அறிவுசார் திருட்டு

அந்த ஓவியத்தை வரைந்த நபர் சன்னியின் விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். "குறைந்தபட்சம் என்னுடைய பெயரையாவது அதில் போட்டிருக்கலாம். அறிவுசார் சொத்து என்பதும் ஒரு பொருள் போன்றது தான். உங்களுடைய எண்ணம் நல்லதாக இருக்கலாம். ஆனால் அணுகுமுறை சரியாக இல்லை", என பதிலடி கொடுத்துள்ளார்.

நெட்டிசன்கள் கிண்டல்

நெட்டிசன்கள் கிண்டல்

சன்னியின் இந்த செயலை பார்த்த நெட்டிசன்கள், "கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதும் திருட்டுதாம்மா", என கிண்டல் அடித்து வருகின்றனர். அதேபோல் மற்றவரின் உழைப்பை திருடி பொது சேவை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் பலர் காட்டமாக சன்னியை திட்டி வருகின்றனர்.

ஏற்கனவே ஏலம் போய்விட்டது

ஏற்கனவே ஏலம் போய்விட்டது

சன்னி லியோன் அந்த ஓவியத்தை ஏற்கனவே ஏலம் விட்டுவிட்டார். அதில் கிடைத்த பணத்தை புற்றுநோயாளிகளுக்காக செலவும் செய்துவிட்டார். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு வந்துள்ளது.

கைநிறைய படங்கள்

கைநிறைய படங்கள்

சன்னி லியோன் தற்போது கை நிறைய படங்களை வைத்துள்ளார். தமிழில் மம்மூட்டியுடன் அவர் நடித்த மதுர ராஜா படம் சமீபத்தில் வெளியானது. இந்தியில் நவாசுதீன் சித்திகி, ஆதியா ஷெட்டி நடித்து வரும் மோதிசூர் சக்னாசூர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன்னி லியோன் ஹீரோயினாக நடித்துள்ள வீரமாதேவி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X