'யாருங்க அப்படி சொன்னா? சிரிக்கறதை நிறுத்துங்க..' வைரலாகும் சன்னி லியோனின் ஒர்க் அவுட் வீடியோ!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள புதிய ஒர்க் அவுட் வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறார், பிரபல நடிகை சன்னி லியோன்.

லாக்டவுன் நேரத்தில் மும்பையில் இருந்த அவர், சிறப்பு விமானம் இயக்கப்பட்டதும் அங்கு பறந்தார்.

கருப்பு நிற பிகினி

கருப்பு நிற பிகினி

பாலிவுட் படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், 2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி ரசிகர்களை திணறடித்தார். தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்தார். அப்படியே தென்னிந்திய சினிமாவுக்கும் வந்தார் சன்னி.

தமிழில் வடகறி

தமிழில் வடகறி

மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். தமிழில், ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இப்போது மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்தப் படத்துக்கு ரங்கீலா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ஒரு பாடலுக்கு

ஒரு பாடலுக்கு

இப்போது சுதீப் நடிக்கும் கோடிகோப்பா 3 படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார். கன்னடத்தில் உருவாகும் இந்தப் படம், இந்தி, தமிழ் உள்பட சில மொழிகளில் வெளியாக இருக்கிறது. மடோனா செபாஸ்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் நடிகை சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிரிப்பதை நிறுத்துங்க

சிரிப்பதை நிறுத்துங்க

அதில் ஊஞ்சல் போன்ற கட்டப்பட்டுள்ள கயிற்றில் படுத்துக்கொண்டு அவர் பேலன்ஸ் செய்ய முயற்சிக்கிறார். முடியவில்லை. கீழே விழுகிறார். அவர் கணவர் சிரிக்கிறார். இதற்கு கேப்ஷனாக, 'புதிய விஷயங்களை ஈசியா முயற்சிக்கலாம்னு யாருங்க சொன்னா? இங்க பாருங்க.. என்னை பார்த்து சிரிக்கிறதை நிறுத்துங்க' என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரை பண்ணுங்க

டிரை பண்ணுங்க

இந்த வீடியோ லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளி இருக்கிறது. பலர் தாறுமாறான கமென்ட்ஸ்களை பதிவிட்டுள்ளனர். சிலர், நீங்க இன்னும் கொஞ்சம் பின்பக்கமாக படுத்துக்கிட்டு டிரை பண்ணுங்க என்று அட்வைஸ் செய்துள்ளனர். இப்படி புதுசு புதுசா ட்ரை பண்ணுங்க, எங்களுக்கும் நேரம் போகணுமில்ல என்று சிலர் கூறியுள்ளனர்.

விழுந்தா தாங்க முடியாது

விழுந்தா தாங்க முடியாது

ஒரு மலையாள ரசிகை, சன்னி சேச்சி எனக்கொரு ரிப்ளை பண்ணுங்களேன் என்று கேட்டுள்ளார். பாத்து சன்னி, கீழே விழுந்திட போறோங்க.. நீங்க விழுந்தா தாங்க முடியாது என்று சிலர் வழிந்துள்ளனர். இன்னொரு வாட்டி ட்ரை பண்ணினா, சரியா பண்ணிடலாம் என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X