சன்னிலியோன் சீரீஸுக்கு எத்தனை பிரச்சனை? இப்போ தமிழ்ராக்கர்ஸ்லயும் வந்துடுச்சாமே…!

Recommended Video

சன்னி லியோனின் வாழ்க்கை படமாகிறது | The trailer of Sunny leone is now viral in youtube.

மும்பை: சன்னிலியோனின் சுயசரிதை தொடரான கரன்சித் கவுர் தமிழ்ராக்கர்ஸில் லீக் ஆகியுள்ளது.

கனடாவில் பிறந்து ஆபாசபடங்களில் நடிக்கத் தொடங்கி பிறகு பாலிவுட் சினிமாவிற்குத் தாவியவர் நடிகை சன்னி லியோன். சன்னிலியோனின் ஆரம்ப கால வாழ்க்கையை வெப் சிரீஸாக தயாரிக்க சீ5 என்டர்டெயின்மென்ட் முடிவு செய்து தயாரிப்பு வேலைகளில் இறங்கியது.

Sunny Leone Biopic Leaked in Tamil rockers!

சன்னி லியோனின் இயற்பெயரான "கரஞ்சித் கவுர்" என்ற பெயரையே வெப் சீரிஸுக்கு பெயராக வைத்து ரிலீஸ் செய்தனர். சன்னி லியோனின் பால்ய வயது கதாபாத்திரமாக "தோபாரா" என்ற இந்தி படத்தில் நடித்த 14 வயது ரைசா சௌஜானி நடித்துள்ளார்.

இந்த நிலையில், கவுர் என்பது சீக்கிய பெண்களைக் குறிக்கும் உயர்வான பெயர் என்றும் சீக்கிய மதத்தை பின்பற்றாத சன்னிலியோனின் வாழ்க்கை வரலாற்று தொடருக்கு அப்பெயரை வைக்க கூடாது என சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன.

இவ்வளவு பிரச்சனைகள் இந்த வெப் சீரீஸுக்கு வந்திருக்கும் நிலையில், இப்போது தமிழ் ராக்கர்ஸில் லீக் ஆகியுள்ளது. தமிழ்த்திரைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் படத்தின் ரிலீஸ் அன்றே படத்தை கள்ளத்தனமாக வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ்ராக்கர்ஸை சேர்ந்தவர்கள் என கேரள பைரசி ஒழிப்பு போலிசார் மூன்றுபேரை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். அதன்பிறகு அதிரடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தின் ஹெச்.டி பிரிண்ட்டை வெளியிட்டு அதிர்ச்சியூட்டியது.

தமிழ் ராக்கர்ஸ் பைரசிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்பட பலரும் போர்க்கொடி தூக்கிவரும் நிலையில், தற்போது சன்னிலியோனின் வெப் சீரீஸையும் வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X