twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "பாதுகாப்பு தர முடியாதது யார் தவறு..?" - கர்நாடக அரசின் தடைக்கு பதிலடி கொடுத்த சன்னி லியோன்!

    By Vignesh Selvaraj
    |

    பெங்களூர் : வரும் புத்தாண்டு தினத்தையொட்டி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து டிக்கெட் விற்பனை செய்து வந்தது.

    அந்த நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில் பிரபல நடிகை சன்னி லியோனும் ஆடுவார் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்தவிட மாட்டோம் என்று சில கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதையடுத்து சன்னி லியோனின் நடனத்திற்கு கர்நாடக அரசு தடைவிதித்தது. இந்நிலையில், கர்நாடக போலீசார் குறித்தும், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குறித்தும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சன்னி லியோன்.

    பெங்களூரில் சன்னி லியோன்

    பெங்களூரில் சன்னி லியோன்

    பெங்களூர் புத்தாண்டு நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் டிக்கெட் விற்பனையும் அமோகமாக நடந்து. ஒரு சில நாட்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

    சன்னி லியோன் வர எதிர்ப்பு

    சன்னி லியோன் வர எதிர்ப்பு

    இந்த நிலையில் சன்னி லியோன் கர்நாடக மாநிலத்திற்குள் கவர்ச்சி நடனம் ஆடக்கூடாது. கர்நாடக கலாச்சாரத்தை சிதைக்கும் இந்த நிகழ்ச்சியை நடத்த விட மாட்டோம் என்று சில கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    சன்னி லியோன் வரக்கூடாது

    சன்னி லியோன் வரக்கூடாது

    இதையடுத்து சன்னி லியோனின் நடனத்திற்கு கர்நாடக அரசு தடைவிதித்தது. "மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சன்னி லியோன் நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கைவிட்டுவிட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கர்நாடக கலாச்சாரம், பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தலாம்" என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார்.

    பாதுகாப்பு கொடுக்க முடியாதாம்

    "பெங்களூரில் உள்ள போலிசார் நான் கலந்துகொள்ளும் புத்தாண்டு நிகழ்வில் எனக்கும், எனது குழுவினருக்கும் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய முடியாது என்று பகிரங்கமாக கூறினாலும், எனது மக்கள் மீதான நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும் எனக்கு எப்போதும் தோன்ற வேண்டும், எனவே நான் இதில் கலந்து கொள்ள முடியாது. நாம் அனைவரும் ஒரு பாதுகாப்பான, மகிழ்ச்சியான புத்தாண்டு கொண்டாட விரும்புகிறேன்" என ட்வீட் செய்துள்ளார் சன்னி லியோன்.

    சொந்தமாக சிந்தியுங்கள்

    "ஆர்ப்பாட்டம் செய்த அனைவருக்கும் மற்றும் எப்போதும் ஆதரவளித்த அனைவருக்கும் எப்போதும் இது நினைவிருக்கவேண்டும். மற்றவர்கள் உங்களைப் பேசவும் தேர்வு செய்யவும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்கள் சொந்த குரல் ஒன்றை வைத்து உங்கள் சொந்த விருப்பங்களின்படி செயல்படுங்கள். நான் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    On the occasion of the New Year's Day, a private organizer in Bangalore organized a dance event and sold tickets. The company also announced that the famous actress Sunny Leone would dance. The Karnataka government has banned the dance of Sunny Leone after some Kannada oraganisations strongly condemned it not to perform this event. In this case, Sunny Leone has posted in Twitter on the police and protesters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X