அப்போ அது உண்மையில்லையா.. சன்னி லியோனுக்கும் ரோஜாவுக்கும் இடையே நடந்த சர்ச்சை.. உண்மை என்ன?

சென்னை: சன்னி லியோன் குறித்து ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை விமர்சித்து பேசியதற்கு சன்னி லியோன் ட்விட்டரில் பதிலடி கொடுத்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த இரண்டு வாரமாக வாராகி யாத்ரா என்ற பெயரில் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்த யாத்திரையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

Bollywood actress Sunny Leone responds to MLA Roja

ரோஜா பதிலடி: இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரைப் பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறும் என்று அவர் கனவு காணுகிறார் என்றார். மேலும், பவன் கல்யாண், முதலமைச்சருக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் போது, சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது என்று பேசி இருந்தார். ரோஜாவின் பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உண்மை இல்லை : அதையடுத்து, நான் ஒரு ஆபாச நடிகை தான். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைபோல் இல்லாமல், நான் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாகவே செய்வேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என சன்னி லியோன் பதிலடி கொடுத்ததாக பல ஊடகங்கள் மற்றும் சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியானது.

அது போலி கணக்கு: ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என்றும், அது சன்னி லியோனின் ட்விட்டர் கணக்கே இல்லை, அது ஒரு போலி கணக்கு என்பது தெரியவந்துள்ளது. சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி ஏதோ ஒரு விஷமி செய்த வேலை என்பது தற்போது தெரியவந்துள்ளதால், இந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் தங்களது செய்திகளை டெலிட் செய்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X