‘கரன்ஜித் கவுரை’ நினைத்து ஒரே இரவில் 1000 முறை கதறி அழுத சன்னிலியோன்!
தன்னை பற்றிய ஆவணப் படத்தைப் பார்த்து கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இரவு முழுவதும் அழுதுள்ளார்.
சென்னை: தன்னைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்த்து, ஒரு இரவு முழுவதும் கதறி அழுததாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
ஆபாச பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இவர் இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் வீரமாதேவி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
ஆபாச பட நடிகையாக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் கவர்ச்சி வேடங்களில் நடித்து, தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ள சன்னி லியோனின் வாழ்க்கை ஆவணப் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

வெப் சீரிஸ்:
கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தவர் சன்னி லியோன். அவரது இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜித் கவுர் - சன்னி லியோனின் சொல்லப்படாத கதை என்ற பெயரில் வெப் சீரிசாக எடுக்கப்பட்டு வருகிறது.

பிளாஷ்பேக்:
கரன்ஜித் கவுராக இருந்தவர் ஆபாச பட உலகுக்கு வந்து சன்னி லியோனாக எப்படி மாறினார் என்பது பற்றி அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை பார்த்த சன்னி லியோன், கதறி அழுதுள்ளார்.
ஏங்கினேன்:
இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, " இன்று இரவு ஆயிரம் முறை எனது இதயம் உடைந்தது. ஆயிரம் முறைக்கு மேல் கதறி அழுதேன்.

விரும்புகிறேன்:
உன்னை (கரன்ஜித் கவுரை) நினைத்து, ஏங்கினேன், தேடினேன், தொலைத்தேன், மன்னிப்பு கேட்டேன், மீண்டும் ஒரு முறை உனது அருகில் நான் இருக்க விரும்பினேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











