சன்னி லியோனுடன் கூட்டணி அமைத்த தர்ஷா குப்தா... வெற்றிப் பெறுமா இந்தக் கூட்டணி?

சென்னை : நடிகை தர்ஷா குப்தா மாடலிங் மூலம் சின்னத்திரையில் நுழைந்து பல சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். தற்போது அவர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது சன்னி லியோனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா மாடலிங்கில் சிறப்பாக செயல்பட்டவர். இதன்மூலம் சின்னத்திரையில் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் தர்ஷா குப்தா. சீரியல்களில் நடித்ததன்மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றார். தொடர்ந்து சிறப்பான சீரியல்களில் நடித்தார்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

இதன்மூலம் கோலிவுட்டில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களிலும் இவரை பல பதிவுகளில் பார்க்க முடிகிறது. இவரது கவர்ச்சிப் புகைப்படங்கள், டிக் டாக் வீடியோக்கள் முதலியவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.

குவியும் பட வாய்ப்புகள்

குவியும் பட வாய்ப்புகள்

இதன்மூலமும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது சன்னி லியோனுடன் இணைந்து இவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தை யுவன் எழுதி இயக்கியுள்ளார். படத்தில் சன்னி லியோனுடன் தர்ஷா குப்தா மற்றும் சதீஷ் இணைந்து நடித்து வருகின்றனர்.

தர்ஷா குப்தா போஸ்டர்

தர்ஷா குப்தா போஸ்டர்

யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தர்ஷா குப்தாவின் கேரக்டரை வெளிப்படுத்தும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சௌம்யா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

நடிகை சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன்

தன்னுடைய கவர்ச்சியால் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள சன்னி லியோன் தற்போது சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது கொட்டேஷன் கேங் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தமிழிலும் வீரமாதேவி, ஷெரொ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஓ மை கோஸ்ட் ஹாரர் திரில்லர் படத்திலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. முன்னதாக தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் ஆட்டம் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X